சினிமாவில் விஜய் இடத்தில் ஜெய்.. அரசியலில் அணிலாக உதவி..; `சட்டென்று மாறுது வானிலை’ பட நிகழ்ச்சியில் தனஞ்செயன் பேச்சு
சினிமாவில் விஜய் இடத்தில் ஜெய்.. அரசியலில் அணிலாக உதவி..;
`சட்டென்று மாறுது வானிலை’ பட நிகழ்ச்சியில் தனஞ்செயன் பேச்சு
ஜெய், மீனாட்சி கோவிந்த், யோகிபாபு நடிப்பில் பாபு விஜய் இயக்கியுள்ள படம் `சட்டென்று மாறுது வானிலை’.
இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது..
இந்நிகழ்வில் தனஞ்செயன் பேசும்போது…
“விஜய் கேரியரில் மிக முக்கியமான மூன்று படங்களை முருகதாஸ் சார் கொடுத்திருக்கிறார். அப்போது விஜய் ’சர்க்கார்’ எடுத்தீர்கள். 6 வருடத்தில் என்ன நடக்கப்போகிறது என அப்போதே படத்தில் வைத்து விட்டீர்கள்.
அடுத்தாக தம்பி ஜெய் அவர்கள்.. விஜயின் அன்புத்தம்பியாக தேர்தல் பிரச்சாரங்களுக்கு எல்லாம் சென்றார். பல விஷயங்களில் விஜய்க்கு உறுதுணையாக இருந்தார்.. இப்போது அவருடைய அண்ணன் வென்றுவிட்டார்.
ஜோசப் விஜய் முதல்வர் ஆனது நமக்கும் நம் சினிமா துறைக்கும் பெருமை.. அவர் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வது போல சினிமா துறைக்கும் நிறைய விஷயங்கள் செய்வார் என எதிர்பார்க்கிறோம். அதற்கு ஜெய்யும் அணில் போல உதவ இருக்கிறார்..
முதல் படத்திலேயே விஜய்யின் தம்பியாக நடித்தார். இன்று இந்தப் படத்தில் ஜெய் நிறைய விஜய் போல செய்திருக்கிறார். இனி விஜய்யை தியேட்டரில் பார்க்க முடியாது, எனவே, ஜெய் அவரைப் போலவே வருவார்… நல்ல நல்ல படங்கள் வந்தது என்றால் உங்கள் அண்ணனைப் போலவே நீங்களும் வளர ஒரு வாய்ப்பிருக்கிறது ஜெய்” என்று பேசினார் தனஞ்செயன்..
Dhananjayan speaks Jai will became like Vijay

