கிருஷ்ணாவதாரம் – தி ஹார்ட் : குறும்பும் ஞானமும் கலந்த திரை தரிசனம்
கிருஷ்ணாவதாரம் – தி ஹார்ட் : குறும்பும் ஞானமும் கலந்த திரை தரிசனம்
கண்கவர் காட்சியமைப்பு, இசை மற்றும் பக்தி உணர்வூட்டும் கதை சொல்லலுக்காக பாராட்டு பெறுகிறது.
சென்னை :கிருஷ்ணாவதாரம் பகுதி 1: தி ஹார்ட் (ஹிருதயம்) திரைப்படம் விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருமித்த பாராட்டுகளை வழங்கும் நிலையில் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் பிரம்மாண்டமான காட்சியமைப்பு, பக்தி உணர்வை வெளிப்படுத்தும் கதை சொல்லல் மற்றும் கிருஷ்ணரின் வாழ்க்கைப் பயணத்தை உணர்வுபூர்வமாக சித்தரித்த விதம் பெரிதும் பாராட்டப்படுகிறது..
புராணக் கதையை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படம், ஆன்மிகம், உணர்வு மற்றும் திரை பிரம்மாண்டத்தை இணைத்த விதத்திற்காக பல்வேறு ஊடகங்களிலும் இணைய தளங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, திரைப்படத்தின் விரிவான உலக அமைப்பு, இசை, காட்சித் தொழில்நுட்பம் மற்றும் மனதை தொடும் நேர்மையான கதை சொல்லல் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது..
குறிப்பிடத்தக்க விமர்சனங்களில், Mashable India இந்தத் திரைப்படத்தை “அழகான அனுபவம்” என்று வர்ணித்துள்ளது. உணர்வுகளையும் பிரம்மாண்டத்தையும் சமநிலையுடன் வெளிப்படுத்திய விதம் பாராட்டப்பட்டுள்ளது. இயக்குநர் ஹர்திக் கஜ்ஜரின் அவர்களின் கற்பனை திறன், காட்சித் தொழில்நுட்பத்தின் இயல்பான பயன்பாடு மற்றும் கிருஷ்ணராக சித்தார்த் குப்தா வழங்கிய நடிப்பு சிறப்பாக கவனம் பெற்றுள்ளது..
குறும்பும் ஞானமும் கலந்த கிருஷ்ணரின் தன்மையை அவர் இயல்பாக வெளிப்படுத்தியதாக விமர்சனம் குறிப்பிடுகிறது.
India Forums இந்தத் திரைப்படத்தை “கிருஷ்ணர் மீதான ஆத்மார்த்தமான, ஆன்மாவை தொடும் அமைதியான படம்” என்று பாராட்டியுள்ளது..

அளவான உணர்வுகளுடன் நகரும் கதை சொல்லலும் ஆன்மிகத் தன்மையும் சிறப்பாக அமைந்துள்ளதாக விமர்சனம் கூறுகிறது. மேலும், பக்தி உணர்வை தக்க வைக்கும் வகையில் கிருஷ்ணரின் உறவுகளை மனிதநேய பார்வையில் சித்தரித்த முயற்சியும் பாராட்டப்பட்டுள்ளது..
செய்தி நிறுவனம் IANS, இந்தத் திரைப்படத்தை “ஒரு பிரம்மாண்டமும் மயக்கும் தன்மையும் கொண்ட பயணம்” என்று குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, கிருஷ்ணரின் கதைகளில் அதிகமாக பேசப்படாத சத்யபாமாவின் பார்வையின் மூலம் கதை சொல்லப்பட்ட விதம் மற்றும் விரிவான காட்சியமைப்பு பாராட்டைப் பெற்றுள்ளது..
திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் தற்போது முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. உணர்வுப்பூர்வமான மற்றும் பக்தி நிறைந்த சூழலை உருவாக்கிய விதத்திற்காக பாடல்கள் பாராட்டப்படுகின்றன. சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பகிர்ந்த ஆரம்பக் கருத்துகளிலும் ஒளிப்பதிவு, இசை மற்றும் திரையரங்க அனுபவம் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.
‘கிருஷ்ணாவதாரம்’ திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது..
Krishnavataram Wins Praise For Visual Grandeur

