முதலமைச்சரான விஜய்யின் 3 கையெழுத்து.. 200 யூனிட் மின்சாரம் ஃப்ரீ.. சிங்கப்பெண் படை.. போதை ஒழிப்பு..!
முதலமைச்சரான விஜய்யின் 3 கையெழுத்து.. 200 யூனிட் மின்சாரம் ஃப்ரீ.. சிங்கப்பெண் படை.. போதை ஒழிப்பு..!
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக கட்சி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. ஆனாலும் பெரும்பான்மை தொகுதிகள் கிடைக்காத நிலையில் மெஜாரிட்டி நிருபிக்க முடியாமல் சில நாட்களாக தவித்து வந்தனர்..
எனவே இந்த சூழ்நிலையில் சில கட்சிகள் விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது.. தற்போது 120 எம்எல்ஏக்களின் ஆதரவு முழுவதுமாக கிடைத்துள்ளது…
காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததை அடுத்து, விஜய்க்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. இதையடுத்து இன்று அவர் முதல்வராக பதவியேற்றார்..
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரோடு, ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்..
சொன்ன திட்டங்களை நிறைவேற்றுவேன் கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் அரசு கஜானாவை காலி செய்து விட்டார்..
மேலும் ₹ 10 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் அதனால் தங்களுக்கு தங்கள் சொன்ன திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டார்..
இதையடுத்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வர் விஜய், தனது அலுவலகப் பணிகளைத் தொடங்கினார். பின்னர், பெரியார் திடலுக்குச் சென்று நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்..
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்..
‘தகுதியுள்ள அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மேற்கண்ட அறிவிப்பின் அடிப்படையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு, மொத்தம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும்; இதற்காக ஆண்டுக்கு ரூ.1,730 கோடி கூடுதல் மின் கட்டண மானியத்தை அரசே ஏற்கவும் இவ்வரசு இதன் மூலம் ஆணையிடுகிறது..
இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட, தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணக் கட்டமைப்பே தொடர்ந்து அமலில் இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதை பொருள் தடுப்பு படை உருவாக்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்.. ஆக முதல் நாளிலேயே மூன்று கையெடுத்து இட்டுள்ளார் முதல்வர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது..
கூடுதல் தகவல்…
மேலும் பதவி ஏற்க உள்ள மற்ற அமைச்சர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா, உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
சோழவந்தான் தனித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான கருப்பையா, 2011-16ல் அதிமுக எம்.எல்.ஏ ஆக இருந்தவர். இந்த தேர்தலில் அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தவெகவில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்..
Tamilnadu Chief Minister Joseph Vijay first 3 signatures

