நடிகர்கள் ரமேஷ் & ஜீவாவின் தந்தையும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளருமான ஆர்.பி. சவுத்ரி மரணம்
நடிகர்கள் ரமேஷ் & ஜீவாவின் தந்தையும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளருமான ஆர்.பி. சவுத்ரி மரணம்
தென்னிந்திய சினிமாவில் தயாரிப்பு நிறுவனங்களில் மிக பிரபலமான நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ்.
தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்தவர் ஆர்.பி.சவுத்ரி .
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே இன்று (மே 5) நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் & திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
தனது நெருங்கிய நண்பர் சௌத்ரி என இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்..

தமிழில் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட படங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானது..
தனது திரையுலக வாழ்க்கையில் ஆரம்பத்தில் சில படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு அவருக்கு சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் பூவே உனக்காக.. இந்தப் படத்தை தயாரித்தவர் சௌத்ரி தான்..
எனவே அவருக்கு நன்றி கடனாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது படத்தில் விஜய் நடிக்க முன் வந்திருந்தார்.. ஆனால் தற்போது தமிழக வெற்றிக் கழக தலைவராக விஜய் வெற்றி பெற்று விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

கடந்த 1980-களில் அவரது திரைப்பட தயாரிப்பு பணியை அவர் தொடங்கினார். சுமார் 40+ ஆண்டுகள் திரைத்துறையில் அனுபவம் கொண்டவர் ஆர்மி சவுதிரி.. பல திறமையான இளைஞர் இயக்குனர்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த பிரபல நிறுவனம் இது.
இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை அவரது சினிமா தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது..
தற்போது விஷால் நடித்து இயக்கி வரும் மகுடம் படத்தை ஆர் பி சவுத்ரியின் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.. சவுத்ரி மரணம் கேட்டு ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது..
Dear All,
The mortal remains of legendary producer RB. Choudhary sir will be kept at his residence from May 6th 3:00 p.m. onwards, allowing fans, friends, and members of the film fraternity to pay their final respects.
📍No.16/27, 9th Street, Dr.Radhakrishnan Salai, Mylapore, Chennai 600004.
Super Good films Producer RB Chowdhry passed away..
—

