ரூம் பாய் விமர்சனம்..
ரூம் பாய் விமர்சனம்..
ஸ்டோரி…
படத்தின் தலைப்பிலேயே கதையை உங்களால் யூகிக்க முடியும்.. பெரும்பாலும் விடுதிகளில் லாட்ஜிகள் ரூம் போடும் போது ரூம் பாயின் உதவி தேவையான ஒன்று.
ஒரு சிலர் தேவைகளுக்காக விடுதிகளில் அறை எடுத்து தங்கினாலும் பலர் சரக்கு அடிக்கவும் மது மங்கை சூதாட்டம் ஆட அறை எடுத்து தங்குகின்றனர்..
நாயகன் நிகில் ஏலகிரியில் உள்ள ஒரு விடுதியில் ரூம்பாயாக வேலைக்கு சேர்கிறார்.. அங்கு சேர்ந்த பின் தான் அவருக்கு அங்கு நடக்கும் பாலியல் குற்றங்கள் தெரிய வருகிறது.. இதற்கு சில அரசியல் பிரபலங்களும் காவல்துறை ஆபீசர்களும் உறுதுணையாக இருக்கின்றனர்..
இந்தப் பாலியல் அத்துமீறல்களை கண்டும் கோபமடையும் நாயகன் நிகில் எப்படி போராடினார்..? அவர்களை எப்படி எதிர்த்து வென்றார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நாயகன் C.நிகில் (சஞ்சய்), நாயகி ஹர்ஷா (நிஷா) இமான் அண்ணாச்சி (Sunny Funny அண்ணாச்சி), பிர்லா போஸ் (சந்துரு), youtube புகழ் காத்து கருப்பு கலை (பிச்சாண்டி), இன்ஸ்டா புகழ் கற்பகம் (சுமதி), கவிதா விஜயன் (இனியா), சமீர் (James Zakiria), சிட்டி ராஜா (TPT Guna), அருண்ராஜா (Villain), பிரபாகர் (இன்பதுரை ) கேரளா பெஹமின் (ஷாலினி)
இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்..

முதல் படம் என்றாலும் தன்னுடைய நடிப்பில் மெச்சூரிட்டியை காட்டி இருக்கிறார் நாயகன் நிகில்.. ஆக்சன் & டான்ஸ் என இரண்டிலும் அசத்தியிருக்கிறார்..
கதைக்கு நாயகி தேவை என்பதைப் போலவே வழக்கமான ஹீரோயின் ஆகவே வந்து செல்கிறார் ஹர்ஷா..
வில்லனாக அருண் ராஜா நடித்திருக்கிறார்.. காப்பாளராக வரும் பிரபாகர் நடிப்பில் செம மிரட்டல்..
இமான் அண்ணாச்சி, காத்து கருப்பு கலை, பிர்லா போஸ் ஆகியோர் கேரக்டர் பங்களிப்பிற்கு உதவியிருக்கின்றனர்..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவு – சி.பாரதி ராஜன் Dft
வீடு லாட்ஜ் என அனைத்தையும் எதார்த்தமாக அப்படியே படமாக்கி இருக்கிறார்.. கலை இயக்குனரும் தன்னுடைய பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்..
பாடல்கள் – சூரியமூர்த்தி
இசை – வேலன் சகாதேவன்
படத்தொகுப்பு – D.V. மீனாட்சி சுந்தர்
பட்டர்பிளை பாடலும் அப்பா பெருமை பேசும் பாடலும் வரிகளும் ரசிக்க வைக்கிறது..
நடனம் – தினா
ஸ்டண்ட் – கார்த்திக் வர்மன்
விளம்பர வடிவமைப்பு S.B.ராஜா
உடைகள்- வளையாபதி
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு நிறுவனம் – ACM சினிமாஸ்
தயாரிப்பு – சூரியகலா சந்திரமூர்த்தி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.
இவர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்..

பெரும்பாலும் லாட்ஜ் கெஸ்ட் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளை காட்டும் போது மது மாது அனைத்தும் காண்பிக்கப்படும்.. ஆனால் அதை வைத்து கதைகளம் என்பது தமிழ் சினிமாவுக்கு அரிதான ஒன்றுதான்.. இதை வைத்து படத்தின் கதையை நகர்த்திருப்பது இயக்குனரின் வித்தியாசமான சிந்தனையை காட்டுகிறது..
சொகுசு பங்களாவில் பாலியல் குற்றங்கள் அதன் மூலம் கோடிகளில் புரளும் தாதாக்கள் அரசியல் பிரபலங்கள் அரசு உயர் அலுவலர்கள் என அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.
ஓர் உண்மைச் சம்பவத்தை கிரைம் பாணியில் கொண்டு செல்கிறார் இயக்குனர் ஜெகன் ராயன்..
Room Boy movie review

