KARA – தனுஷை கட்டிப்பிடிக்க ரவீனா ஆசை..? – ஸ்ரீஜா..; தனுஷை இயக்கிய கே.எஸ். ரவிக்குமார்.? கிண்டலடித்த சுராஜ்

KARA – தனுஷை கட்டிப்பிடிக்க ரவீனா ஆசை..? – ஸ்ரீஜா..; தனுஷை இயக்கிய கே.எஸ். ரவிக்குமார்.? கிண்டலடித்த சுராஜ்

KARA – தனுஷை கட்டிப்பிடிக்க ரவீனா ஆசை..? – ஸ்ரீஜா..; தனுஷை இயக்கிய கே.எஸ். ரவிக்குமார்.? கிண்டலடித்த சுராஜ்

 

 

‘போர் தொழில்’ படத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் விக்னேஷ் ராஜா.. இவர் அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் ‘கர’.

இந்தப் படத்தில் தனுஷ், மமீதா பைஜு, ஸ்ரீஜா ரவி, கே எஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் வருகிற ஏப்ரல் 30 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது..

நாளை ஏப்ரல் 19ஆம் தேதி கர படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்..

சமீபத்தில் ஒரு பேட்டியில் சுராஜ் மற்றும் கேஸ் ரவிக்குமார் கலந்து கொண்டனர்.. அப்போது ஏன் தனுஷ் படத்தை இயக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது..

அதற்கு கே எஸ் ரவிக்குமார் பதில் அளிக்கும் போது..

தனுஷ் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அந்த படத்தின் பூஜையும் போடப்பட்டது அதில் கமலஹாசன் கலந்து கொண்டார். படத்திற்கு ஓடிப்போலாமா என்ற பெயரும் வைக்கப்பட்டது..

ஆனால் பைனான்ஸ் பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்கள் அந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார்..

அப்போது சஅருகில் இருந்த நடிகர் சுராஜ் இதைக்கேட்டு சிரித்துக்கொண்டே படத்தின் தலைப்புதான் பிரச்சனை.. ஓடிப்போலாமா என்ற பெயர் வைத்தனர்.. அதனால் ஓடிப் போய்விட்டது”.. என்று கலாய்த்தார்.

அதுபோல மற்றொரு மலையாள டிவி சேனல் பேட்டி ஒன்றில்.. நடிகை ஸ்ரீஜா ரவி.. ‘கர’ படத்தில் தனுஷின் அம்மாவாக நான் நடித்திருக்கிறேன்.. ஒரு காட்சியில் தனுஷை கட்டிப் பிடிக்க வேண்டும்..

அப்போது என்னிடத்தில் என் மகள் இருக்கக் கூடாதா என்று நினைத்துக் கொண்டேன் என்றார்.

ஏனென்றால் ஸ்ரீஜாவின் மகள் ரவீனா ரவி தனுஷின் மிகப்பெரிய ரசிகை என்பது இங்கு கவனிக்கத்தக்கது..

 

Kara movie promotions Sreeja Ravi and Suraj Venjaramood