மோகனின் ‘திரௌபதி2’ படத்திற்கு வாழ்த்து மழை பொழியும் பாமக – பாஜக பிரபலங்கள்

மோகனின் ‘திரௌபதி2’ படத்திற்கு வாழ்த்து மழை பொழியும் பாமக – பாஜக பிரபலங்கள்

 

மோகனின் ‘திரௌபதி2’ படத்திற்கு வாழ்த்து மழை பொழியும் பாமக – பாஜக பிரபலங்கள்

 

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரௌபதி2 திரைப்படம் திருவண்ணாமலையை ஆண்ட வீரவல்லாளர் மற்றும் காடவராயர்களின் வரலாற்றை பேசுகிறது என்று அறிந்தேன். நம் முன்னோர்களின் வீரத்தையும் மக்கள் நலன் காக்கும் ஆட்சி முறையையும் காட்சிப்படுத்தியிருக்கும் இப்படத்தை விரைவில் திரையரங்கில் காண உள்ளேன். நாளை (23.1.26) வெளியாகும் திரௌபதி2 திரைப்படம் வெற்றிபெற இயக்குநர் மோகன் ஜி மற்றும் படக்குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
#draupathi2…

இவ்வாறு எக்ஸ் தளத்தில் பாமக அன்புமணி ராமதாஸ் வாழ்த்தி இருக்கிறார்..

 

அன்புச் சகோதரர் திரு @mohandreamer அவர்கள் இயக்கத்தில், திரௌபதி 2 திரைப்படம், நாளை வெளியாகவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

புண்ணிய பூமியாம் நம் திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு, 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மாமன்னன் வீர வல்லாளர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்டுள்ள திரௌபதி 2 திரைப்படம், மறைக்கப்பட்ட வீரத் தமிழ் மன்னர்கள் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியாக அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டியது, முன்னேற்றப் பாதையில் செல்ல விரும்பும் ஒரு சமூகத்தின் கடமை. அந்த வகையில், சகோதரர் திரு @mohandreamer அவர்களது திரைப்படங்கள், சமூக அக்கறையுடன் குறைகளைச் சுட்டிக்காட்டி, சுயநலத்துடன் செயல்படுபவர்களை அடையாளம் கண்டு புறக்கணித்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.

அந்த வகையில், திரௌபதி 2 திரைப்படமும், அறமும், வீரமும் சேர்ந்த தமிழ் மண்ணின் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதாகவும், பெருமை மிகுந்த தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் அழித்து, தமிழக மக்களிடையே பிரிவினையைத் தூண்டுபவர்களை அடையாளம் காட்டுவதாகவும் அமையவும், திரௌபதி 2 திரைப்படம் மாபெரும் வெற்றியடையவும், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

 

இவ்வாறு எக்ஸ் தளத்தில் தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்தி இருக்கிறார்..

 

PMK Anbumani and BJP Annamalai wishes Draupathi 2 and Mohan