வெள்ள குதிர விமர்சனம் 3.25/5..

வெள்ள குதிர விமர்சனம் 3.25/5..

 

வெள்ள குதிர விமர்சனம் 3.25/5..

 

ஸ்டோரி…

வியாபாரத்தில் நஷ்டம் பின்னர் கடன் வாங்கியும் ஏகப்பட்ட கடன் தொல்லையால் ஒரு மலைவாழ் கிராமத்தில் தன் மனைவி மகனுடன் தஞ்சம் அடைகிறார் நாயகன், ஹரிஷ் ஓரி..

அங்கும் இவரது பேராசை இவரை விடவில்லை.. கள்ளச்சாராயத்தை கள்ள சந்தையில் விற்று சம்பாதிக்கிறார்..

ஆனால் இவரது மனைவியோ அந்த மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்.. அங்கு முன்னாள் கவுன்சிலர் செய்யும் அட்டூழியங்களை அம்பலப்படுத்துகிறார்..

அடைக்கலம் கொடுத்த மக்களுக்கு மனைவி நல்லது செய்ய… கணவன் கெட்டது செய்ய அந்த மக்களின் வாழ்வாதாரம் என்ன ஆனது.? இவர்களின் குடும்பம் என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சரண்ராஜ்..

கேரக்டர்ஸ்…

ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ், மெலோடி, ரெஜின் ரோஸ், உதிரி விஜயகுமார், ஜீவிதா

இது நடித்த பல கலைஞர்கள் கூத்து பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்.. எனவே அவர்களது உடல் மொழியில் கேரக்டரை உயர்த்திருக்கிறார்கள்..

ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ், மெலோடி, ரெஜின் ரோஸ் என ஒவ்வொருவரும் தங்கள் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர்..

உதிரி விஜயகுமார், முருகனாக வரும் ரெஜின், சாராயம் காய்ச்சும் தாத்தா, மருத்துவ பெண், போஸ்ட் ஆபீசர் ஜீவிதா என் அனைவரும் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களை பிரதிபலிக்கிறார்கள்..

டெக்னீசியன்ஸ்…

இசை: பரத் ஆசீவகன்
ஒளிப்பதிவு : ராம்தேவ்

இருவரும் வெள்ளை குதிரையின் கதை ஓட்டத்திற்கு பக்கபலம்… கடிவாளம் போட்ட குதிரையைப் போல நேர்த்தியாக படத்தைக் கொடுத்துள்ளனர்..

தயாரிப்பு: நிஜம் சினிமா
இயக்கம்: சரண்ராஜ் செந்தில்குமார்

காக்காமுட்டை மணிகண்டன் உதவியாளர் சரண்ராஜ் செந்தில்குமார்..

சாராயம் என்பதைக் கூட மூலிகை ரசம் என்றே சொல்லி பதிவு செய்திருக்கிறார்..

 

வாழ நினைத்தால் எங்கிருந்தாலும் வாழலாம்.. ஆனால் திருந்தி வாழ வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.. முக்கியமாக மலைவாழ் மக்களின் வாழ்வியலை நுட்பமாக பதிவு செய்து இருக்கிறார்..

ஹீரோயிசம் இல்லாமல் எதார்த்தமாக படத்தின் கதையை முடித்து இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்.. வெள்ள குதிரை பின்னணியும் அதன் சுவாரசியமும் ரசிக்க வைக்கிறது..

 

Vella Kuthira movie review