50 ஹீரோயின்ஸ் முடியாதுன்னு சொல்லிட்டாங்க..; ‘காந்தி கண்ணாடி’-யில் கலங்கிய பாலா
50 ஹீரோயின்ஸ் முடியாதுன்னு சொல்லிட்டாங்க..; ‘காந்தி கண்ணாடி’-யில் கலங்கிய பாலா
KPY பாலா நாயகனாக அறிமுகமாகும் படம் ‘காந்தி கண்ணாடி’.. முக்கிய வேடத்தில் பாலாஜி சக்திவேல் & அர்ச்சனா நடிக்க நாயகியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார்..
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரித்துள்ளார். ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கியுள்ளார். விவேக் – மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர்.
இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.. இந்த விழாவில் பங்கேற்ற நாயகன் பாலா பேசும்போது…

‘காந்தி கண்ணாடி’ படத்திற்கான ஆடிஷன் நடந்து கொண்டிருக்கும் அப்போது நடிகைகள்.. யார் ஹீரோ? என்று கேட்பார்கள் பாலா என்ற என் பெயரை சொன்னதும் அவர்கள் நடிக்க மறுப்பார்கள்.. பிறகு சொல்கிறேன் என்பார்கள்.. அவர்கள் மீது தவறு இல்லை.. நானும் பெரிய ஆள் கிடையாது..
இப்படியாக 50 நாயகிகள் வரை தேர்வு நடைபெற்றது.. 51வது நாயகியாக தான் நமீதா என்னுடன் நடிக்க எனக்கு ஜோடியாக நடிக்க ஓகே சொன்னார்.. ” என்றார் பாலா
தற்போது அனைத்து பணிகளும் முடித்து செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மதராஸி படத்துடன் காந்தி கண்ணாடி மோதுவது துணிச்சலான முடிவா? என்று கேட்கிறீர்கள்.. மதராசி படம் வெற்றி பெறும். அந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள். எங்க படமும் வெற்றி அடையும்..

சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம்.. அவர் இருக்கும் உயரம் வேறு, நான் இருக்கும் இடம் வேறு..
நான் எந்த அரசியல் தலைவர்களுக்கும் எதிராக செயல்படவில்லை.. வறுமைக்கு எதிராக செயல்படுகிறேன்”… என்று பேசினார் பாலா..
50 Actresses refused to act with me says KPY Bala

