தாலாட்டும் பூங்காற்று நீயல்லவா..; பாடகி எஸ். ஜானகி காலமானார்..; வாழ்க்கை குறிப்பு..
தாலாட்டும் பூங்காற்று நீயல்லவா..; பாடகி எஸ். ஜானகி காலமானார்..; வாழ்க்கை குறிப்பு..
பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு – இந்திய இசையுலகம் பேரிழப்பில்
இந்திய திரையிசை உலகின் ஒப்பற்ற குரலாக பல தலைமுறைகளின் இதயங்களை கவர்ந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் என்ற செய்தி இசை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தனது இனிமையான குரலால் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்தவர் எஸ். ஜானகி. பல தசாப்தங்களாக இந்திய இசைத்துறையில் அவர் நிகழ்த்திய பங்களிப்பு அளவிட முடியாதது.
அவரது மறைவு இந்திய இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது..
இனிய குரல் அழியாது; அவர் பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டி என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.”
அவரது வாழ்க்கை குறிப்பு..
மைசூருவில் குடும்பத்துடன் தங்கியிருந்த நிலையில் ஜானகியின் உயிர் பிரிந்தது. ஜானகியின் மறைவை அவரது பேத்தி உறுதிப்படுத்தியிருக்கிறார்
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பல்லேபட்லா என்கிற கிராமத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்தவர் எஸ்.ஜானகி. தனது 3 வயது முதல் பாடல்கள் பாடி வரும் இவர் 15+ மொழிகளில் 38,000 அதிகமான பாடல்களை பாடியுள்ளாராம்..

1959 ஆம் ஆண்டு ராம்பிரசாத் என்பவரை மணந்த ஜானகிக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன் மட்டுமே உள்ளார்..
இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா,, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, அனிருத் என அன்று தொடங்கி இன்றைய இசையமைப்பாளர்கள் இசையில் இவர் பாடியிருக்கிறார்..
Legendary Singer S Janaki passed away at age 88

