இதயம் முரளி விமர்சனம் 3.75/5… சொன்ன காதலுக்கு அழகுண்டு.. சொல்லாத காதலுக்கு அழிவில்லை.!

இதயம் முரளி விமர்சனம் 3.75/5… சொன்ன காதலுக்கு அழகுண்டு.. சொல்லாத காதலுக்கு அழிவில்லை.!

இதயம் முரளி விமர்சனம் 3.75/5… சொன்ன காதலுக்கு அழகுண்டு.. சொல்லாத காதலுக்கு அழிவில்லை.!

 

 

ஸ்டோரி…

1990 காலகட்டங்களில் மறைந்த நடிகர் முரளி பல படங்களில் காதலை சொல்லாமல் காதலித்துக் கொண்டே இருப்பார்.. அதில் முக்கியமான படம் இதயம்.. அதே பெயரில் அவரது மகன் அதர்வா நடித்துள்ள படம் ‘இதயம் முரளி’.. இவரும் தந்தையைப் போல காதலை சொல்லாமல் ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்கிறார்.

பள்ளிக்காலங்களில் டியூஷன் தோழி பிரீத்தி முகுந்தனை காதலிக்கிறார்.. ஒரு கட்டத்தில் காதலை சொல்ல நினைக்கும் போது சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. அதன் பிறகு பிரீத்தியை சந்திக்க முடியாத சூழல் ஏற்படுகிறது..

கல்லூரி காலங்களில் நாயகி கையாடு லோகரை காதலிக்கிறார்.. அந்த காதலையும் சொல்ல சொல்ல முடியாத சூழ்நிலை.. இப்படியான இவரது வாழ்க்கையில் யாரிடம் காதலை சொன்னார்.? யாரை திருமணம் செய்து கொண்டார்.? காதல் திருமணம் கைகூடியதா.? என்பதெல்லாம் சுவாரசியமான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…

அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயடு லோகர், நட்டி, தமன், சுதாகர், நிஹாரிக்கா, ரக்சன், டிராவிட், ஏஞ்சலின், அருவி மதன், யாசா ஸ்ரீ, ஜோனிடா, மாளவிகா மோகன்

ஸ்கூல் பையன் காலேஜ் பையன் என இரண்டு மாறுபட்ட தோற்றத்தில் அதர்வா அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. துள்ளலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. அந்த ட்ரெயின் காட்சியில் அதர்வாவின் நடிப்பு மிகச் சிறப்பு..

அதர்வாவின் காதல் பிளாஷ்பேக்கை கேட்பதற்கென்று கோட் சூட் போன்ற ஒருவராக பகத்பாசில்.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் இவருக்கு மாளவிகாவுக்கும் செம ட்விஸ்ட்..

டென்னிஸ் பிளேயர்.. குட்டை பாவாடை.. என உள்ளங்களை கொள்ளை அடிக்கிறார்.. ப்ரீத்தி.. இவரது ஸ்மைல் பிரகாசம்..

ப்ரீத்தியை ரசித்து முடிப்பதற்குள் திடீரென பியூட்டிஃபுல் என்ட்ரி கொடுக்கிறார் கையாடு லோகர்.. கொஞ்ச நேரம் மட்டுமே வந்து இன்னும் வரமாட்டாரா.? என கெஞ்ச வைத்து விட்டார்..

இவர்களுடன் முரளியின் பழைய காலேஜ் மேட் சின்னி ஜெயந்த் நட்புக்காக நடித்துக் கொடுத்திருக்கிறார்.. அதர்வாவின் தாய் மாமனாக நட்டி.. பொறுப்பான அங்கிள்..

பரிதாபங்கள் சுதாகர் & டிராவிட் இருவரும் நடிப்பில் கலக்கி இருக்கின்றனர்.. காதல் கொண்டேன் தனுஷ் போன்ற ஒரு காட்சியில் சுதாகர் ரசிக்க வைக்கிறார்..

நண்பராக ரக்சன், தோழியாக ஏஞ்சலின், தமன் காதலியாக நிகாரிகா, டீச்சராக ஜொனிட்டா உள்ளிட்டோர் நட்புக்கு உறுதுணை..

டெக்னீசியன்ஸ்..

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா கேமராவும் பிரதீப் ராகவ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.. படத்தை தன் ஒளிப்பதிவில் கலர்ஃபுல்லாக பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

இதயம் முரளி திரைப்படத்தை தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார்.

அதர்வா அறிமுக காட்சியில்.. இதயமே… இதயமே… மெலோடி இசையால் ஈர்த்து விடுகிறது.. ஏப்ரல் மாதத்தில் பாட்டு கொஞ்சம் மிக்ஸி பண்ணி… அதற்கு ரீமிக்ஸ் கொடுத்து தமன் கவர்ந்திருக்கிறார்..

அதுபோல பொட்டு வைத்த வட்ட நிலா பாடல்.. 35 ஆண்டு கால எவர்கிரீன் பாட்டு இன்று ஜென்சி கிட்சுக்கு பிடிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது…

சொல்லாத காதல்.. வாம்மா வாம்மா.. என்ற தனுஷ் குரல் பாடல் ஆட்டம் போட வைக்கிறது…

அதர்வா காதலை சொல்ல நினைக்கும் போதெல்லாம் அவருக்கு வரும் ஏமாற்றத்தை அழகாக ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன்..

எல்லோருக்கும் காதல் என்பது ஒரு பொதுவான உணர்வு தான்.. ஆனால் அதில் பல வகை உண்டு.. பார்க்காமல் காதல்.. சொல்லாத காதல்.. சோசியல் மீடியா காதல் என பல வகை உண்டு.. பார்த்தவுடன் பிக்கப் பேச மறுத்தவுடன் டிராப் என்று மாறிவிட்டாலும் இன்னும் சொல்லாத காதல் இங்குண்டு.. சொல்லாத காதலுக்கு என்றென்றும் அழிவில்லை என்பதையும் சொல்லி இருக்கிறார் ஆகாஷ் பாஸ்கரன்..

 

Idhayam Murali movie review