With Love விமர்சனம் 4/5.. சொல்லாத காதலை தேடித் தேடி சொல்வோமா.?

With Love விமர்சனம் 4/5.. சொல்லாத காதலை தேடித் தேடி சொல்வோமா.?

With Love விமர்சனம் 4/5.. சொல்லாத காதலை தேடித் தேடி சொல்வோமா.?

 

ஸ்டோரி…

நாயகன் – அபிஷன் ஜீவிந்த்..

நாயகி – அனஸ்வரா ராஜன்

நாயகனின் அக்கா தன் தம்பியை அழைத்து உனக்கு பெண் பார்த்து இருக்கிறேன்.. அவளை பார்த்து பேசி விட்டு வா.. பிடித்திருந்தால் அடுத்த ஏற்பாடுகளை செய்யலாம் என்று கூறி அனுப்பி வைக்கிறார்.. நாயகன் நாயகியை ஒரு காபி ஷாப்பில் சந்திக்க அப்பொழுதுதான் இருவரும் திருச்சியில் ஒன்றாக படித்தவர்கள்.. தாங்கள் இருவரும் அந்தப் பள்ளியின் ஜூனியர் – சீனியர் என்பது தெரிந்து கொள்கின்றனர்..

இருவரும் பேசும்போது.. உனக்கு ஏற்கனவே காதல் இருந்ததா.? என்று கேட்க இருவரும் முன்னாள் காதல் பற்றி பேச.. அப்படி என்றால் நாம் இருவரும் முன்னாள் காதலர்களை சந்திப்போம்.. ஒருவேளை அது கை கூடினால் அதன்படி நடக்கலாம் என்று பயணிக்க ஆரம்பிக்கின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.?என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன்,  சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, R.J. ஆனந்தி, டிம்பிள் கண்ணாம் சித்தார்த்

அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜன்.. இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி உள்ளது.. டூரிஸ்ட் பேமிலி படத்தில் ஒரு சின்ன ரோலில் மட்டும் நடித்த அந்த படத்தின் இயக்குனர் அபிஷன் இதில் முழு கதை நாயகனாகவே மாறியிருக்கிறார்.. அதற்கு ஏற்ப உடல் மொழியிலும் அதிக கவனம் எடுத்து ரசிகர்கள் மனதை கவர்கிறார்..

மலையாளம் கலந்த அழகு தமிழில் பேசி அனஸ்வரா அசத்தியிருக்கிறார்.. ஒவ்வொரு கியூட் எக்ஸ்பிரஷனிலும் நம்மை கொள்ளை கொள்கிறார்..

தேனி முருகன் மற்றும் சித்தப்பு சரவணன் இருவரும் சின்ன ரோல் கவனிக்க வைக்கின்றனர்.. முக்கியமாக சரவணன் கேரக்டர் ஆசிரியர்களை பெருமைப்படுத்தும்..

பாலாஜி கேரக்டர் மற்றும் அனீஷா கேரக்டர் இரண்டும் படத்தை தாங்கி நிற்கும் தூணாக அமைந்திருக்கிறது..

டெக்னீசியன்ஸ்…

இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

யுவன் சங்கர் ராஜா பாடிய பாடலும்.. ஷான் ரோல்டன் பாடிய பாடலும் அருமை.. முக்கியமாக பாடல் வரிகள் ஸ்டேட்டஸ்களில் அடிக்கடி பார்க்க தோன்றும்..

காதல் பாட்டு எனக்கு மட்டும் ஒப்பாரியா கேக்குதயே…

அடடா இவளா என் பக்கத்துல…
அழகா சிரிச்சேன் நான் வெட்கத்துல..” என்ற பாடல்கள் சிறப்பு…

ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் பள்ளி கால நினைவுகள் நம்மையே அழைத்துச் செல்வது போன்ற உணர்வை தருகிறது..

இயக்கம் : மதன்
தயாரிப்பு : செளந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியன்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அபிஷனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதன் இந்த படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.. தன் குருவுக்கு ஏற்ற வகையில் காட்சிகள் அமைத்திருப்பது சிறப்பு.. பழைய காதலர்களை சந்தித்தால் என்னவாகும் என்று எதிர்பார்ப்பை எகிற செய்யும் கிளைமாக்ஸ் அமைந்திருப்பது சிறப்பு.

ஆனால் நாயகன் நாயகியை இணைக்க வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டதாக தெரிகிறது.. நெகட்டிவ் கிளைமாக்ஸ் வைத்திருந்தால் கூட ஓகே ரகம் தான்..

ஏதோ ஒரு சூழ்நிலையில் காதலை சொல்லாமல் தவித்தவர்கள் மீண்டும் சொல்லும் தருணத்தை காட்சிகளாக அமைத்திருக்கிறார் இயக்குனர் மதன்..

 

With Love movie review