WILD TAMILNADU வைல்ட் தமிழ்நாடு விமர்சனம்.. பல்லுயிர் வளங்களை அடுத்த தலைமுறைக்கு சொல்லும் முயற்சி
WILD TAMILNADU வைல்ட் தமிழ்நாடு விமர்சனம்.. பல்லுயிர் வளங்களை அடுத்த தலைமுறைக்கு சொல்லும் காவியம்
WILD TAMILNADU என்ற ஆவணப்படத்தைச் சுந்தரம் ஃபாஸனர்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதை நாடு முழுவதும் உள்ள பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் பொதுமக்கள் காணலாம்..
முதலில் ஆங்கிலத்தில் ரிலீசானது.. சில தினங்களில் தமிழில் வெளியாக உள்ளது… இதுமட்டும் இல்லாமல் தமிழ்நாடு போல தென்னிந்தியாவில் உள்ள கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வளங்களை இது போன்ற திரைப்படமாக வெளியிட உள்ளனர் என்பது கூடுதல் தகவல்..
Wild Tamilnadu is story of resilience and hope
இந்த ஆவண படத்தில் தமிழ்நாட்டில் உள்ள வளங்களை வகை வகையாக பிரித்து வாய்ஸ் ஓவரில் எளிதாக எளிய மனிதர்களுக்கும் புரியும் படியாக விவரித்துள்ளார் நடிகர் அரவிந்த்சாமி..
1. குறிஞ்சி – Mountain Lands
2. முல்லை.. Wood Lands
3. மருதம் Crop Lands
4. பாலை Desserts
5. நெய்தல் Coasts
குறிஞ்சி: மலையும் மலை சார்ந்த இடமும்…
முல்லை: காடும் காடு சார்ந்த இடமும்..
மருதம்: வயலும் வயல் சார்ந்த இடமும்…
நெய்தல்: கடலும் கடல் சார்ந்த இடமும்…
பாலை: சுரமும் சுரம் சார்ந்த இடமும் (மணலும் மணல் சார்ந்த இடமும்)
This five landscape types in classical Tamil Sangam literature..

என ஒவ்வொரு வகையாக நிலங்களைப் பற்றியும்.. அதில் வாழும் உயிரினங்கள் பற்றியும்.. அவற்றின் வாழ்வியல் முறை பற்றியும்… அவற்றின் இனப்பெருக்கம் பற்றியும் காட்சிகளாக அருமையாக விளக்கப்பட்டுள்ளது..
Each spiece has unique pulse
இந்த நிலத்தில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் அதன் தனித்தன்மையுடன் வாழ்வதை அழகாக காட்சிகளாக சித்தரித்துள்ளனர்..
தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, அடுத்த தலைமுறைக்கு இதனை எடுத்துச் செல்லும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது..
முக்கியமாக இதை தமிழக அரசு ஒவ்வொரு பள்ளிகளிலும் திரையிட்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்..
ஒரு மணி நேர ஆவணப்படமான இதை, ‘நேச்சர் இன்ஃபோகஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு வனத்துறையின் ஒத்துழைப்புடன் பெரும் பொருட்செலவில் சுந்தரம் ஃபாஸனர்ஸ் தயாரித்துள்ளது.
இயற்கை மற்றும் வனவிலங்கு ஆவணப்பட இயக்குநரான கல்யாண் வர்மா இயக்கி உள்ளார்..
3 முறை கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ், பின்னணி இசை அமைத்துள்ளார்..
இது மாணவர்கள் பார்க்க வேண்டிய படம் குழந்தைகள் பார்க்க வேண்டிய படம் என்று நினைக்காதீர்கள்… நமக்கே தெரியாத பல அறிய தகவல்களை இதில் காணலாம்..

முக்கியமாக எறும்பு, தூக்கணாங்குருவி புலி, மான், யானை, கொக்கு, மீன் வகைகள், ஆமைகள், குரங்கு வகைகள், சிட்டுக்குருவி, புழு பூச்சிகள், பச்சோந்தி வகைகள் என அனைத்தையும் மிகவும் நுட்பமாக ரசிக்கத்தக்க வகையில் ஆச்சரியப்படும் வகையில் படமாக்கி உள்ளனர்..
WILD TAMILNADU review

