பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.; திரையுலகினர் அஞ்சலி

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.; திரையுலகினர் அஞ்சலி

 

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.; திரையுலகினர் அஞ்சலி

 

சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நவம்பர் 9 இரவு நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.. தூக்கத்திலேயே அவர் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

தமிழ் – தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ்.. (வயது 80)

காத்தாடி ராமமூர்த்தி இயக்கிய பட்டினப்பிரவேசம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானார் டெல்லி கணேஷ்.. இவரது இயற்பெயர் கணேஷ்.. பட்டினம் பிரவேசம் என்ற படத்தின் மூலம் இவரை கே பாலச்சந்தர் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார்.

அப்போது ஏற்கனவே சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன் என்ற பெயர் நடிகர்கள் இருப்பதால் டெல்லி கணேஷ் என்ற பெயரை வைத்தார்.. மேலும் டெல்லிக்கும் கணேசுக்கும் தொடர்பு இருப்பதால் இந்த பெயரை அவர் வைப்பதாக காரணம் சொல்லியிருந்தார்..

பாலச்சந்தர் இயக்கிய ‘சிந்து பைரவி’ படத்தில் இவர் ஒரு இசைக் கலைஞராக இருப்பார்.. இவரது குடிகார கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்று தந்தது..

திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரை நாடகங்களிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்..

மேலும் பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.. ரஜினி கமல் முதல் இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் பலருடன் நடித்தவர் டெல்லி கணேஷ்..

எந்த கதாபாத்திரம் என்றாலும் தன் உடல் மொழியை மாற்றிக் கொண்டு நல்ல பெயரை பெற்ற சிறந்த நடிகராக திகழ்ந்தவர் டெல்லி கணேஷ்..

இவரது மரணம் திரையுலகுக்கு பேரிழப்பாகும்.. எனவே திரை உலகினர் பலரும் இரங்கலை தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்…

நாளை நவம்பர் 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளன..

Veteran Actor Delhi Ganesh passed away