உசுரே விமர்சனம்… மாங்கல்ய சதியில் மாட்டிக் கொண்ட மகள்
உசுரே விமர்சனம்… மாங்கல்ய சதியில் மாட்டிக் கொண்ட மகள்
ஸ்டோரி…
தமிழக – ஆந்திரா எல்லையான சித்தூரில் கதைக்களம் அமைந்துள்ளது.. இந்த கிராமத்தில் எதிரெதிர் வீடுகளில் நாயகன் டீ.ஜெ & நாயகி ஜனனி வசிக்கின்றனர்..
கணவன் விட்டு ஓடிப்போன காரணத்தால் மகள் ஜனனியை மிகவும் கண்டிப்பாக வளர்த்து வருகிறார் மந்த்ரா.. ஒரு கட்டத்தில் நாயகியை காதலிக்கிறார் நாயகன்.. அவரின் நல்ல சுபாவத்தால் அவர் மீது காதல் கொள்கிறார்.. ஆனால் இதுவோ மம்மி மந்த்ராவுக்கு பிடிக்காத சூழ்நிலை இருவரையும் பிரிக்க முயற்சிக்கிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது.? காதலர்கள் இணைந்தார்களா.? மந்தராவின் திட்டம் என்ன.? அம்மா கட்டுப்பாட்டில் இருந்தாரா.? அல்லது காதலனை கை பிடித்தாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
‘அசுரன்’ படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்த டிஜே தான் இந்த படத்தின் நாயகன்.. எதார்த்த கிராமத்து இளைஞனாக வலம் வருகிறார்.. ஆனால் படம் முழுக்க சீரியஸாக காணப்படுகிறார்.. அழகான ஜனனியுடன் கொஞ்சம் ரொமான்ஸ் செய்திருக்கலாம்..
கண்டிப்பான அம்மா மந்தராவுக்கு கட்டுப்பட்ட பெண்ணாக ‘பிக்பாஸ்’ ஜனனி.. கன்னங்களும் கண்களும் அழகு.. இறுதி காட்சியில் ஜனனி ஒரு ஜான்சி ராணி..
1990-களில் பார்த்து ரசித்த மந்த்ரா.. இதில் கண்டிப்பான அம்மா.. ஆனால் இவர் போடும் திட்டங்கள் ஒவ்வொன்றும் அம்மம்மா..
நாயகனின் அம்மாவாக செந்தி குமாரி.. அப்பாவாக கிரைம் மனோகர்.. பல படங்களில் காமெடி செய்திருந்தாலும் இதில் கண்கலங்க வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார்..
நாயகனின் நண்பர்களாக தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் என அனைவரின் நடிப்பும் சிறப்பு..

டெக்னீசியன்ஸ்…
இசையமைப்பாளர் கிரண் ஜோஷ் இசையில் பாடல்கள் அருமை.. ரெண்டு காதல் பாடலுமே காதலர்களை கவரும்.. பின்னணி இசையும் ரசிக்கும் ரகமே..
ஒளிப்பதிவாளர் மார்க்கி சாய்.. பட்ஜெட் படம் என்றாலும் ஒளிப்பதிவில் பாராட்டும் வகையான பணியை செய்து இருக்கிறார்..
மகளை வைத்து திட்டம் போடும் ஒரு சில பெண்களையும் இந்த படத்தில் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் நவீன் டி.கோபால்..

இடைவேளை வரை வழக்கமான காதல் கதையாக செல்லும் இந்த உசுரே கிளைமாக்ஸ் காட்சியில் உண்மை சம்பவத்தின் உச்சத்தை எட்டியது..
Usurae movie review

