உருட்டு உருட்டு விமர்சனம்.. குடிகாரர்களுக்கு எச்சரிக்கை பொருட்டு..
உருட்டு உருட்டு விமர்சனம்.. குடிகாரர்களுக்கு எச்சரிக்கை பொருட்டு..
ஸ்டோரி…
மாதுவை விட மது மேல் பிரியராக இருக்கிறார் நாயகன் கஜேஷ் நாகேஷ்..
ஆனால் நாயகன் மீது வலிய வந்து காதல் கொள்கிறாள் நாயகி ரித்விகா ஸ்ரேயா.. ஒரு கட்டத்தில் குடிகார காதலனை திருத்த பார்க்கிறாள்.. ஆனால் திருத்த முடியவில்லை.
எனவே அவனை திருத்த ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கிறாள் நாயகி.. அது என்ன என்பதுதான் படத்தின் அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ்..

கேரக்டர்ஸ்…
கஜேஷ் நாகேஷ்.. இவர் மறைந்த காமெடி நடிகர் நாகேஷின் பேரன் அவர்.. நடிகர் ஆனந்த் பாபுவின் மகன் ஆவார்.. தாத்தாவைப் போல் காமெடியிலும் தந்தையைப் போல் டான்சிலும் கவனம் செலுத்தினால் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும்..
நாயகியாக அறிமுக நடிகை ரித்விகா ஸ்ரேயா.. கண்களும் புருவமும் அழகு.. அட இவரும் வழக்கமான நாயகி தானா என்று நாம் நினைக்கையில் திடீரென இவர் விஸ்வரூபம் எடுக்கும் அந்த கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி..
நாயகியின் தந்தையாக தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர்..
இவர்களுடன் சேரன் ராஜ், மிப்பு நடேசன், அங்காடித்தெரு கருப்பையா, பாவா லட்சுமணன் ஆகியோரும் உண்டு..
மேனியை மூடிய ஆடையுடன் நாயகி வருவதால் கவர்ச்சிக்கு மூவரை இறக்கி விட்டுள்ளார் டைரக்டர்..
மொட்டை ராஜேந்திரனுக்கு ஜோடிகளான அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி’ மூவரும் சேலையில் வந்தாலும் கவர்ச்சியில் நம்மை கிறங்கடிக்கின்றனர்..
பாவா லட்சுமணன்.. பாவம் என்று சொல்லும் அளவுக்கு ஒரே இடத்திலேயே இருந்து ஓரிரு வசனங்கள் பேசி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
பாடலுக்கு இசையமைத்த அருணகிரி &
பின்னணி இசையமைத்த கார்த்திக் கிருஷ்ணன்.. ரசிக்க வைத்துள்ளனர்..
இன்று ட்ரெண்டிங்கில் காணப்படும் வார்த்தை உருட்டு உருட்டு.. யாராவது ஏதாவது ஒரு பொய் சொன்னால் நன்றாகவே உருட்டு என்பார்கள்..
ஒளிப்பதிவாளர் யுவராஜ் பால்ராஜ் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்..
எழுதி இயக்கியிருக்கிறார் பாஸ்கர் சதாசிவம்.. மதுவால் சீரழியும் சமூகத்தையும் ஆணவக் கொலை பற்றியும் அழகான சோசியல் மெசேஜுடன் படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர்.. ஆனால் அதை சொன்ன விதத்தில் காமெடி கலந்து கருத்தை தவறவிட்டிருக்கிறார்.
இடைவேளை வரை படம் சுமாராக சென்றாலும் அதன் பிறகு மொட்ட ராஜேந்திரன் வந்த பிறகு படம் கலகலப்பு உச்சத்திற்கு செல்கிறது.. தளுக்.. மொழுக்.. குலுக்.. என மூன்று பொண்டாட்டிகளுடன் ராஜேந்திரன் அடிக்கும் ரவுண்டு.. யோவ் உனக்கு உடம்பெல்லாம் மச்சம் யா என்று சொல்ல தோன்றுகிறது..
இப்படி சிரிப்பான சீன்களுடன் சீரியஸான கிளைமாக்ஸ் கொடுத்திருக்கிறார் டைரக்டர்.. குடிகாரன்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாஸ்கர்..
வசனம் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இந்த உருட்டு உருட்டு ரசிகர்களுக்கு நல்ல பொருட்டாகவே இருந்திருக்கும்..
Uruttu uruttu movie review

