ட்ராமா விமர்சனம்.. குழந்தை பாக்கியம் மோசடி

ட்ராமா விமர்சனம்.. குழந்தை பாக்கியம் மோசடி

 

ட்ராமா விமர்சனம்.. குழந்தை பாக்கியம் மோசடி

 

 

TRAUMA என்றால் கடுமையான வலி.. தாங்க முடியாத வலி என்பது பொருளாகும்..

ஸ்டோரி…

ஓர் இரவில் முதல் காட்சியில் ஒரு கார் பயணித்துக் கொண்டிருக்க போலீஸ் (சஞ்சீவ்) செக்கப் நடந்து கொண்டிருக்கிறது.. அந்தக் காரை பரிசோதனை செய்யும்போது டிக்கியில் ஒரு நபர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்..

இதனைப் பார்க்கும்போது கார் ஓட்டி வந்தவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர்.. அப்படி என்றால் அந்த காரில் நடந்தது என்ன என்பதுடன் கதை விரிகிறது..

விவேக் பிரசன்னா – சாந்தினி தமிழரசன் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.. தன்னால் தான் இந்த பிரச்சனை என்பதை மனைவியிடம் மறைத்து வாழ்கிறார்.. ஆனால் தன் நண்பர் ஆனந்த் நாக் வுடன் தன் பிரச்சனையை பகிர்ந்து கொள்கிறார் விவேக் பிரசன்னா.. எனவே குழந்தை பாக்கியம் பெற சிகிச்சைக்கு நண்பர் ஆனந்த் நாக் உதவுகிறார்.

ஆட்டோ டிரைவர் மாரிமுத்து – ரமா தம்பதியின் மகள் பூர்ணிமா ரவி.. இவர் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார்.. இவரை துரத்தி துரத்தி பார்த்தோஷ் காதலித்து வருகிறார்.. ஒரு நாள் பூர்ணிமாவிடம் பங்க் முதலாளி நமோ நாராயணன் தவறாக நடக்க முயற்சிக்க அவரிடம் இருந்து காப்பாற்றுகிறார்.. எனவே பார்த்தோஷ் மீது காதல் கொள்கிறார்.

மற்றொரு புறம் கார் மெக்கானிக் ஈஸ்வர்.. காரை திருடி வரும் நபர்களுக்கு பணம் கொடுத்து காரை வாங்கி விற்று வருகிறார்.

பிரதீப் கே.விஜயன் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை நடத்தி வருகிறார்..

இந்த நான்கு கதைகளையும் ஹைப்பர் லிக் மூலம் இணைத்து ஒரு சோசியல் மெசேஜ் சொல்லி இருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன்..

 

கேரக்டர்ஸ்…

விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், சஞ்சீவ், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பார்த்தோஷ், நிழல்கள் ரவி, வையாபுரி

கதையில் நாயகனாக விவேக் பிரசன்னா.. கதைக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து மிகைப்படுத்தாத நடிப்பில் அழகாக யதார்த்தமாக தன் கேரக்டர் மூலம் பதிவு செய்து இருக்கிறார்.. தன் இயலாமையை நண்பனிடம் சொல்லி அழும் காட்சிகளை ரசிக்க வைக்கிறார்..

ஆனந்த் நாக் படு ஸ்மார்ட்டாக வருகிறார்.. படத்தில் இவரது கேரக்டர் எதிர்பாராத ட்விஸ்ட்..

நாயகி சாந்தினி.. நடிப்பிலும் அழகிலும் கவர்கிறார்.. குழந்தை இல்லாத ஒரு மனைவி படும் அவஸ்தைகளை தன் கேரக்டரில் உணர்த்தியிருக்கிறார்..

பூர்ணிமா ரவி அழுத்தமான நடிப்பில் கவர்கிறார்.. தன் காதலன் ஏமாற்றி விட்டதை உணர்ந்த போதும் தன் வயிற்றில் வளரும் குழந்தையை நினைத்து உருகும் போதும் நடிப்பில் குட் ஸ்கோர் செய்கிறார்..

பார்த்தோஷ்.. ஸ்மார்ட்டான இளைஞராக நடிப்பில் கவர்கிறார்.. அட இவரா இப்படி என? யோசிக்க வைக்கிறார்..

ஆட்டோ டிரைவர் மறைந்த நடிகர் மாரிமுத்து மற்றும் ரமா இருவரும் நடிப்பில் சிறப்பு.. அதேசமயம் மாரிமுத்துவுக்கு கொடுத்த டப்பிங் இரைச்சலை இயக்குனர் கவனிக்கவில்லையா.?

கார் திருடும் நபர்களும் சீரியஸ் படத்தில் கொஞ்சம் கலகலப்பு ஊட்டி இருக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் சஞ்சீவ், கான்ஸ்டபிள் வையாபுரி, அமைச்சர் நிழல்கள் ரவி ஆகியோரும் உண்டு..

 

டெக்னீசியன்ஸ்…

அஜித் சீனிவாசன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.. ஆர்எஸ் ராஜ பிரதாப் இசை நேர்த்தி..

தயாரிப்பு : டர்ன் ப்ரொடக்ஷன்ஸ் ஹவுஸ்
இயக்கம் : தம்பிதுரை மாரியப்பன்..

குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் பல கருத்தரிப்பு மையங்கள் தினம் தினம் பெருகி வருகிறது.. இதனை வைத்து பல வேறு விதமான மிரட்டல்கள் செய்து ஒரு கும்பல் பணம் பறிப்பதை அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குனர்..

குழந்தைக்காக காத்திருக்கும் பெற்றோர் பலர்.. அதே சமயம் பெற்றோருக்காக பல குழந்தைகளும் (அனாதைகளாக) காத்திருக்கின்றனர்.. எனவே தத்தெடுத்து குழந்தைகளை வளர்க்கலாம் என்ற அழகான மெசேஜ் சொல்லி இருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன்..

Trauma movie review