தரைப்படை திரை விமர்சனம்

தரைப்படை திரை விமர்சனம்

 

தரைப்படை திரை விமர்சனம்

 

ஸ்டோரி…

மக்களிடம் வசூல் செய்து அதிக வட்டி தருவதாக ₹1000 கோடி மோசடி செய்து ஒரு கும்பல் தப்பிக்கிறது.. ஏமாற்றிய பணத்தில் வைரங்களாக சேர்த்து வைக்கிறான் கும்பல் தலைவன்.. அவரிடமிருந்து பிரஜன் வைரங்களை கொள்ளை அடிக்கிறார்.. இவரிடம் உள்ள வைரங்களை கொள்ளை அடிக்க விஜய் விஸ்வா மற்றும் ஜீவா ஆகியோரும் திட்டமிடுகின்றனர்..

இறுதியில் கொள்ளை அடித்தவர் யார்.? இவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

பாம்பே ரிட்டன் கேரக்டரில் ஜீவா.. இவர் ரஜினி ரசிகர் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியை ஜெராக்ஸ் எடுத்து இருக்கிறார்.. அப்பாவி முகம் ஆனால் அசால்டான நடிப்பில் அதிரடி காட்டி இருக்கிறார் விஜய் விஷ்வா..

கருப்புதான் எனக்கு ஃபேவரிட் என்பது போல பல காட்சிகளில் கருப்பு உடையில் வந்து கவனம் பெறுகிறார் பிரஜன்.. மூவரும் ஈகோ இல்லாமல் நாயகர்களாக நடிக்க ஒப்புக்கொண்டது சிறப்பு..

டெக்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் மனோஜ்குமார் பாபுவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு..

நிறைய சேசிங் காட்சிகள் இருந்தாலும் அதை சிரமத்துடன் கையாண்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம்.

வழக்கமான கதை தான் என்றாலும் அதை பல திருப்பங்களுடன் சொல்லி ஆக்ஷன் விருந்தளித்து இருக்கிறார் இயக்குனர் ராம் பிரபா.. யார் ஹீரோ? யார் வில்லன்? யார் நல்லவர்? யார் கெட்டவர்? என யூகிக்க முடியாதபடி காட்சிகளை அமைத்து இருப்பது கூடுதல் சிறப்பு..

புகைப்பிடித்தல் உடலுக்கு கேடு என எச்சரிக்கை போடப்பட்டாலும் தரைப்படை முழுவதும் புகையிலேயே பயணிப்பதை இயக்குனர் தவித்து இருக்கலாம்..

Tharaipadai movie review