தணல் விமர்சனம்… அதர்வா & அஸ்வின் மோதல்
தணல் விமர்சனம்… அதர்வா & அஸ்வின் மோதல்
ஸ்டோரி…
அதர்வா மற்றும் அவரது நண்பர்கள் நால்வர் ஒரே நேரத்தில் போலீஸ் வேலைக்கு இணைகின்றனர்.. முதல் நாளே இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் அவர்களுக்கு இரவு நேர ரோந்து பணி கொடுக்கிறார்..
வேறு வழியின்றி அவர்கள் அனைவரும் ஒன்றாக செல்லும்போது அங்கு ஒருவன் ஓடுவதை பார்க்கின்றனர்.. அவனைத் துரத்தி சென்ற ஓர் இடத்தில் அனைவரும் சிக்கிக் கொள்கின்றனர்…
அப்போதுதான் அவர்களுக்கு அஸ்வின் கும்பலின் கொள்ளையடிக்கும் திட்டம் தெரிய வருகிறது.. அதாவது ஒரே நாளில் சென்னையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிடுகின்றனர்..
இவர்களின் நோக்கம் என்ன.? அதுவும் ஒரே நேரத்தில் இப்படி இவர்கள் செயல்பட காரணம் என்ன.? இதன் பின்னணி என்ன என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
அதர்வா, அஸ்வின் ககுமனு, லாவண்யா திரிபாதி, பரணி, லட்சுமிபிரியா
நாயகன் அதர்வா வில்லன் அஸ்வின் என்று சொல்லப்பட்டாலும் இருவருக்கும் சம அளவிலே கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.. அதிலும் அதர்வாவை விட அஸ்வின் அதிரடி காட்டி ஸ்கோர் செய்திருக்கிறார்.. தன் இன மக்களுக்காக போராடும் அஸ்வின் கேரக்டர் அசத்தல்.. அதிலும் அவரது ஹேர் ஸ்டைலும் அழகு..
முதல் நாள் வேலைக்கு சேரும் போலீசாக அதர்வா.. பயம் பதட்டம் ஆக்சன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்..
ஒரே இரவில் ஒவ்வொரு நண்பராக அதர்வா இழக்கும்போது அந்தப் பதட்டம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.
லாவண்யா திரிபாதி, பரணி, ஷா ரா, லட்சுமிபிரியா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.. பூவையாரின் பிளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு அச்சாணி.
அதர்வா லாவண்யா பிளாஷ்பேக் ரொமான்ஸ் காட்சிகள் அருமை.. சாராவின் காமெடியும் சரவெடி..

டெக்னீசியன்ஸ்…
இசை : ஐஸ்டின் பிரபாகர்
ஒளிப்பதிவு : சக்திசரவணன்
ஒரே இரவில் நடக்கும் கதையை பல கோணங்களில் படம் பிடித்து நம்மை சீட்டு நுனியில் உட்கார வைத்து விட்டார் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்..
ஜஸ்டின் பிரபாகரன் இசை படத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது..
தயாரிப்பு : ஜான்பீட்டர்
இயக்கம் : ரவீந்திர மாதவா
தணல் என்றால் நெருப்பு.. அனல் என்று அர்த்தம்.. ஒரே இரவில் நடக்கும் கதையே திரில்லர் எமோஷனல் என்கவுண்டர் என அனைத்தையும் கலந்து கொடுத்திருப்பது இயக்குனரின் டைரக்ஷன் டச்.. பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் போடுவது ஏன் அதற்குப் பின்னணி என்ன என்பதை உணர்வுபூர்வமாக கொடுத்திருப்பது சிறப்பு..
Thanal movie review
—

