தமிழ்நாடு – கேரளா – புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் & முடிவு தேதிகள் அறிவிப்பு..; முழு விவரம்

தமிழ்நாடு – கேரளா – புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் & முடிவு தேதிகள் அறிவிப்பு..; முழு விவரம்

 

தமிழ்நாடு – கேரளா – புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் & முடிவு தேதிகள் அறிவிப்பு..; முழு விவரம்

 

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் சற்று முன் அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையனர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார்..

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது..

ஒட்டுமொத்த 5 மாநிலங்களிலும் சுமார் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், மொத்தம் 824 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இந்த 5 மாநில தேர்தலில் சுமார் 25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..

தமிழ்நாடு – கேரளா – புதுச்சேரி தேர்தல் முக்கிய தேதிகள் விவரம்

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் தேதி – ஏப்ரல் 6

வேட்புமனு பரிசீலனை தேதி – ஏப்ரல் 7

வேட்புமனு திரும்பப்பெற கடைசி தேதி – ஏப்ரல் 9

வாக்குப்பதிவு தேதி – ஏப்ரல் 23 (வியாழக்கிழமை)

வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியாகும் தேதி – மே 4 (திங்கள்).

 

ஏப். 9ல் புதுச்சேரி தேர்தல்:புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப். 9ல் கேரள தேர்தல்: கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது..

In Kerala, Assam and Puducherry, polls will be held in a single phase on April 9. Tamil Nadu will vote in a single phase on April 23. In West Bengal, polls will be held in two phases on April 23 and 29. Counting across all four states and Puducherry will be held on May 04.

தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. ஆளும் திமுக தலைமையில், காங்கிரஸ், விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

அதிமுக தலைமையில் பாஜக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன..

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம் போல 234 தொகுதிகளிலும் தனித்தே களமிறங்குவதாக கூறி வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.

மேலும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் பெரும்பாலும் தனித்து போட்டியிடவே வாய்ப்புள்ளது..

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் தொகுதி எண்ணிக்கை இதோ…

* மேற்கு வங்கம் – 294

*தமிழ்நாடு – 234

*கேரளா – 140

*அசாம் – 126

*புதுச்சேரி – 30

 

Tamilnadu Kerala Puducherry election date and result Announcement

 

 

Related articles