சுமோ விமர்சனம்.. ஜப்பானில் கணேஷ்
சுமோ விமர்சனம்.. ஜப்பானில் கணேஷ்
ஸ்டோரி…
வீடிவி கணேஷ் நடத்தும் சர்ஃபிங் கிளப்பில் பணிபுரிந்து வருகிறார் மிர்ச்சி சிவா.. ஒரு நாள் கடற்கரையோரம் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் கடற்கரை ஓரம் ஒதுங்கி மயக்க நிலையில் கிடக்கிறார்..
இதனை பார்த்த சிவா அவரை அழைத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.. அப்போது அவர் உடலளவில் வலிமையாக இருந்தாலும் மனதளவில் 1 வயது குழந்தையாகவே இருக்கிறார் என்கிறார் டாக்டர்.. எனவே அவரை குழந்தை போல் பாவித்து அவருக்கு கணேஷ் என்று பெயர் வைத்து கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார் சிவா.
இவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியாத நிலையில் அவரை அந்த ஊர் மக்களும் ஏற்றுக்கொண்டு அவரை தங்கள் வீட்டு பிள்ளையாகவே நினைத்து வளர்த்து வருகின்றனர்..
ஒரு கட்டத்தில் இவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த சுமோ வீரர் என்பதை அறிகின்றனர்.. அதே வில்லன் கும்பலால் கடலில் வீசப்பட்டவர் என்ற விவரத்தையும் அறிகின்றனர்..
அதன் பின்னர் சிவா மற்றும் VTV கணேஷ் என்ன செய்தனர்..? சுமோ வீரனை குடும்பத்தாரிடம் இணைந்தார்களா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
மிர்சி சிவா கதை நாயகன் என்றாலும் ஜப்பான் நடிகர் தான் படம் முழுக்க ஆக்கிரமித்து இருக்கிறார்.. ஆனால் அவருக்கும் டயலாக் மற்றும் எக்ஸ்பிரஷன் இல்லாமல் படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் எஸ்.பி. ஹோசிமின்..
சிவா சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.. மற்றபடி முக பாவனைகள் எப்போதும் ஒரே போல தான்.. கொஞ்சம் நடிங்க பாஸ் என்றே சொல்ல வைக்கிறார்..
தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகி போல பிரியா ஆனந்த் வருகிறார்.. அழகும் திறமையும் நிறைந்த இந்த தமிழ் நடிகைக்கு பெரிய வசனங்கள் கூட இல்லை.
நிழல்கள் ரவி, யோகி பாபு, சதீஷ் ஆகியோர் இருந்தும் ஒரு இடத்தில் கூட சிரிப்பு வரவில்லை..

டெக்னீசியன்ஸ்…
படத்தின் தொடக்கத்தில் டிடிவி கணேஷ் செல்லும் காரை போலீஸ் சதீஷ் பரிசோதித்து அவரை ஸ்டேஷனுக்கு கூட்டி செல்கிறார்.. அங்கு கணேஷ் கதை சொல்ல தொடங்குகிறார்.. இறுதியாக அவரது பெட்டியில் தங்கம் இருப்பதையும் சொல்கிறார்.. இந்த தங்கத்திற்கும் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற ஒரு வரி கூட வைக்கவில்லை இயக்குனர்..
தயாரிப்பு : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் : எஸ்.பி. ஹோசிமின்
நிவாஸ் கே. பிரசன்னாவின் இசை ஒரு சில இடங்களில் ரசிக்க வைக்கிறது.. அட்லீஸ்ட் சிவா மற்றும் ஃபிரியாவிற்கு ஒரு டூயட் கொடுத்து படத்தை கலகலப்பாக்கி இருக்கலாம்..
சுமோ சண்டைக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.. அதையும் அழகாக இன்னும் பிரம்மாண்டமாக படமாக்கி இருந்தால் இந்த சுமோ பெரிய வீரனாகி இருப்பான்..
Sumo movie review

