மண்டாடி விமர்சனம் 4/5.. தொடர் வெற்றிகளை கொடுத்து மகுடம் சூடும் சூரி
மண்டாடி விமர்சனம் 4/5.. தொடர் வெற்றிகளை கொடுத்து மகுடம் சூடும் சூரி
ஸ்டோரி…
முகவை மைந்தன்ஸ் அணி – சூரி
சுனாமி ரைடர்ஸ் அணி.. – சுஹாஸ்
தன் முன்னாள் காதலி மகன் மிதுனுக்கு ஒரு உயிர் பிரச்சனை… அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் சூரி.. இதன் மூலம் சூரி உயிருக்கு பிரச்சினை.. எனவே 20 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து ஊருக்கு திரும்புகிறார்..
அப்போது தன் மக்களின் பிரச்சனைக்காக பாய்மரகு படகு போட்டியில் கலந்து கொள்ள நிர்பந்தம் ஏற்படுகிறது.. அதன் பிறகு என்ன செய்தார் சூரி என்பதுதான் இந்த படத்தின் மிரட்டலான திரைக்கதை..

கேரக்டர்ஸ்…
சில வருடங்களுக்கு முன்பு காமெடியில் கலக்கிய சூரி தற்போது கதாநாயகனாக கலக்கி வருகிறார்.. விடுதலை 1 & 2, கருடன் மாமன் உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளை தொடர்ந்து தற்போது இந்த மண்டாடி மூலம் தன் நடிப்புக்கு மகுடம் சூட்டி இருக்கிறார் சூரி…
ரொமான்ஸ் தனக்கு செட்டாகாது என்று நினைத்தாரோ என்னவோ… ரொமான்ஸ் கொஞ்சம் தள்ளி வைத்து சென்டிமென்ட் மற்றும் ஆக்சன் முக்கியத்துவம் கொடுத்து தனக்கான ரூட்டை சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பில் மிரட்டி வருகிறார் சூரி..
மஹிமாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சியில் நம்மையும் கண்கலங்க வைக்கிறார் சூரி.. மண்டாடி மூலம் மீனவர்களின் நண்பனாக மாறி இருக்கிறார் சூரி.. சூப்பர்ன்னா..
வில்லன் என்று சொன்னாலும் செகண்ட் ஹீரோ போல சுஹாஸ்.. நடிப்பில் சூறாவளியாக மிரட்டி இருக்கிறார்.. ஒழுங்காக வாராத தலைமுடி.. அழுக்கு லுங்கி என மீனவராகவே மாறி இருக்கிறார்.. இவரது டப்பிங் குரல் பலம்..

இதுவரை ஏற்காத கேரக்டரில் மஹிமா நம்பியார்.. இளமை கேரக்டரில் அழகு முதுமை கேரக்டரில் அழுக்கு என்றாலும் கேரக்டருக்கு பக்கா பொருத்தம்.. தன் மகனைப் பார்த்து… அம்மாக்கள் லவ் பண்ணியிருக்க கூடாதா.? உன்னோட ரேடியோக்காரி உன்ன தான் கட்டிப்பாள் என்ன நிச்சயம்.? என்னும் கேட்கும் காட்சியில் அசத்தல்..
இடைவேளைக்குப் பிறகு வந்தாலும் சத்யராஜின் கேரக்டர் தனி கெத்து.. மாஸ் காட்டிருக்கிறார்..
மஹிமாவின் மகனாக மிதுன் ஜெய்சங்கர்.. (இவர் டூரிஸ்ட் பேமிலி படத்தில் சசியின் மூத்த மகனாக நடித்தவர்..) மீனவ இளைஞனாக மின்னுகிறார் மிதுன் ஜெய்சங்கர்..
இவர்களுடன் பால சரவணன், கிருத்திகா மற்றும் ரவீந்திர விஜய் உள்ளிட்டோரும் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…
ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.. பாடல்கள் தனி டிராக் ஆக இல்லாமல் படத்துடன் ஒன்றி பயணிக்கிறது.. முக்கியமாக மண்டாடி & கைவளவி குலுங்க & உசுரே நீ தான் புள்ள… ஆகிய பாடல்களை ரிப்பீட் மோடில் கேட்கலாம்…
எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.. கடலை இப்படி பிரம்மாண்டமாக எவரும் கொடுத்ததில்லை என்பது போல மிரட்டி இருக்கிறார்.. வறண்ட பூமி ராமநாதபுரத்தின் கடல் சார்ந்த பகுதிகளை காட்டி நம் கண்களை குளிர்ச்சியாக்கி இருக்கிறார்..
பீட்டர் ஹெயின் மற்றும் திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.. ஆக்ஷன் பிரியர்களுக்கு செம ட்ரீட்..
பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்திருக்கிறார் விறுவிறுப்பு கூடும் காட்சிகளை கரெக்டாக கட்டிங் செய்திருக்கிறார்..
20 வருட இடைவெளியை காட்டும் போது.. சூரி மற்றும் பால சரவணன் மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..

தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத பாய் மர படகு போட்டியை கடலுக்குள் சென்று சென்று வந்த உணர்வுடன் கொடுத்திருக்கிறார் மதிமாறன் புகழேந்தி..
வழக்கமான காதல் கதை.. நண்பர்களின் கதை.. துரோகத்தின் பழிவாங்கல்.. மீனவ கிராமங்களின் பிரச்சினை, பாய்மர படகு போட்டி என வழக்கமான கதையாக இருந்தாலும் மேக்கிங் மூலம் நமக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார்..
கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி என பல வகை போட்டிகளை பார்த்து சலித்து போன தமிழ் ரசிகர்களுக்கு பாய்மர படகு போட்டி மூலம் ஒரு வித்தியாசமான கடல் அனுபவத்தை கொடுத்திருக்கிறார் மதிமாறன் புகழேந்தி..
கிளைமாக்ஸ் காட்சி அந்த கடல் சுழற்சி கிராபிக்ஸ் போதவில்லை.. செயற்கை ஆக தெரிகிறது..
Soori in Mandaadi movie review

