சூது கவ்வும் 2 திரை விமர்சனம்
சூது கவ்வும் 2 திரை விமர்சனம்
ஸ்டோரி….
பழம்பெரும் அரசியல்வாதியான வாகை சந்திரசேகர்.. பல மாதங்களாக சுயநினைவின்றி கோமா ஸ்டேஜில் இருக்கிறார்.. இந்த சூழ்நிலையில் ராதாரவி முதல்வராக பொறுப்பேற்கிறார்.. லஞ்சம் ஊழல் என்ற ஆட்சி இருக்கையில் கருணாகரனும் ஊழலில் முக்கிய புள்ளியாக இருக்கிறார்.
சுயநினைவுக்கு திரும்பும் வாகை சந்திரசேகர் புதிதாக கட்சி ஆரம்பிக்கிறார்.. இந்த சூழ்நிலையில் ஒரு கட்டத்தில் கருணாகரனை கடத்துகிறார் மிர்சி சிவா.
அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…
சூது கவ்வும் படத்தின் நாயகனாக நடித்த விஜய் சேதுபதி கேரக்டரில் மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார்.. ஆனால் இதில் நீங்கள் விஜய் சேதுபதியை நினைத்தால் கொஞ்சம் ஏமாற்றம்தான்.. மிர்ச்சி சிவா தன் பாணியில் கொஞ்சம் காமெடி கலந்து ஒர்க்கவுட் செய்திருக்கிறார்..
சூது கவ்வும் படத்தின் பாதங்கள் எத்தனை வந்தாலும் அதில் கருணாகரன் இல்லாமல் இருக்காது என்றனர் படக்குழுவினர்.. அதற்கு ஏற்ப கருணாகரனும் தன் பாணியில் கலக்கியிருக்கிறார்.
கற்பனை காதலி ஹரிஷா நானும் படத்தில் இருக்கிறேன் என அவ்வப்போது வந்து செல்கிறார்..
எம்.எஸ்.பாஸ்கர், வாகை சந்திரசேகர், ராதாரவி, சிவாவுடன் வரும் கல்கி ராஜா, ‘நக்கலைட்ஸ்’ கவி, போலீஸ் அதிகாரி யோக் ஜேபி இன்னும் கூடுதல் மெனக்கட்டளை கொடுத்திருக்கலாமோ என்று தோன்ற வைக்கின்றனர்..
எட்வின் லூயிஸ் விஸ்வநாத்தின் பின்னணி இசை மற்றும் கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது..
பணம் வழங்குவதற்கு கேம்ஆப், வெள்ளை கலர் சித்திரவதை, கண்ணுக்குத் தெரியாத காதலிக்காக மருத்துவமனை செல்வது என சில ஐடியா சீன்களை ரசிக்கும்படியாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன்..
பல இடங்களில் அரசியல் நையாண்டி கொடுத்து படத்திற்கு கலகலப்பு ஊட்டி இருக்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன்.
Soodhu Kavvum 2 movie Review

