சார் பட விமர்சனம் 3.75/5… தளராத தலைமுறை வாத்தியார்

சார் பட விமர்சனம் 3.75/5… தளராத தலைமுறை வாத்தியார்

 

 

சார் பட விமர்சனம்… தளராத தலைமுறை வாத்தியார்

 

ஸ்டோரி….

தாத்தா… : அண்ணாதுரை (சந்திரகுமார்)
மகன்… : பொன்னரசன் (சரவணன்).
பேரன்… : சிவஞானம் (விமல்)

ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு கல்வியை கொடுக்க போராடும் மூன்று தலைமுறை வாத்தியார்களை பற்றிய கதை ‘சார்’.

ஆதிக்க சாதியின் அரசியல் பிடியிலிருந்து ஒடுக்கப்பட்டவர்களை மீட்க போராடும் இவர்களின் போராட்டம் என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் கதை..

 

கேரக்டர்ஸ்…

மூன்று வாத்தியார்களில் முதன்மை மார்க்கை பெறுகிறார் சரவணன்.. சித்தப்பு சரவணன் என்று அழைக்கப்பட்ட இவர் இனி சார் சரவணன் என்று அழைக்கப்படலாம்..

இடைவேளை வரை காதல் குறும்புத்தனம் செய்து பின்னர் பொறுப்பான வாத்தியாராக மாறி வியக்க வைக்கிறார் விமல்..

நண்பனாக அப்பாவித்தனம் காட்டி பின்னர் வில்லனாக மிரட்டி இருக்கிறார் சிராஜ்.. யார்ய்யா இவர்? என ஆச்சரியப்படும் நடிப்பை கொடுத்திருக்கிறார் சிராஜ்..

நாயகி சாயாதேவிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தில் கண்களாலும் நடிப்பாலும் கவர்கிறார்..

‘குட்டிப்புலி’ ஷரவண சக்தி, வ.ஐ.ச.ஜெயபாலன், ரமா, சந்திரகுமார் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு பக்க பலம்..

கல்வி அதிகாரியாக டிவி பிரபலம் செந்தில்வேலும் நடித்திருக்கிறார்.. கன்னி மாடம் படத்தில் கவர்ந்த ஸ்ரீராம் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்..

 

டெக்னீசியன்ஸ்..

ஆத்தங்குடி இளையராஜாவின் இசை பாராட்டுக்குரியது.. ‘அடியே புட்ட வெச்ச ரவிக்கைக்காரி…’ பாடல் சிறப்பு..
சித்துகுமாரின் இசையில் ‘படிச்சிக்குறோம்’ பாடல் பள்ளி மாணவர்களின் ஃபேவரைட் பாடலாக மாறினாலும் ஆச்சரியமில்லை.

இனியன் ஜெ. ஹரீஷின் ஒளிப்பதிவு, மாங்கொல்லை பசுமையை கண்களில் கடத்தியிருக்கிறது.. ஶ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது…

‘கன்னி மாடம்’ படத்தில் அருமையான குடும்ப செண்டிமெண்ட்டை கொடுத்த இயக்குனர் போஸ் வெங்கட் இதில் கல்வியின் அவசியத்தை ஆணித்தரமாக புரிய வைத்திருக்கிறார்..

சாமானியனுக்கு கிடைக்க வேண்டிய கல்வி மீது அரசியல் பூசி மதச்சாயம் பூசி அநீதி இழைக்கும் அக்கிரமக்காரர்களை அடையாளம் காட்டி இருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட்..

மேலும் சுகுணா திவாகரின் வசனங்கள் பல இடங்களில் கைத்தட்டலை வர வைக்கிறது..

மூடநம்பிக்கை என்ற பெயரில் கிராமங்களில் நடக்கும் சாமி ஆட்டம்.. பொன்னரசன் வாத்தியாருக்கு ஏற்படும் கொடுமைகள்.. சிவஞானத்தின் சிந்தனை என பல சுவாரசியங்கள் கவர்கின்றன..

Sir movie review..