சட்டமும் நீதியும் வெப் சீரிஸ் விமர்சனம்

சட்டமும் நீதியும் வெப் சீரிஸ் விமர்சனம்

சட்டமும் நீதியும் வெப் சீரிஸ் விமர்சனம்

 

ஸ்டோரி..

ஆரம்பக் காட்சியே நீதிமன்ற வளாகத்தில் ஒரு பெரியவர் தன் மகளை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என நீதிமன்றத்தை நாடுகிறார்..

ஆனால் அங்கும் அவரின் வழக்கை எவரும் எடுக்க முன் வராத நிலையில் அங்கேயே தீக்குளித்து இறந்து போகிறார்..

நீதிமன்றத்திற்கு வெளியே நோட்டரி பப்ளிக் (சரவணன்).. ஆனால் இவரை எவரும் ஒரு வக்கீலாக நினைக்காமல் கிண்டல் அடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்..

ஆனால் சரவணன் மீது கொண்ட நம்பிக்கையின்படி அருணா (நம்ரிதா) இவரிடம் ஜூனியர் வக்கீலாக சேர நினைக்கிறார்.. ஆனால் சரவணன் அதை மறுக்கிறார்..

இந்த நிலையில் சரவணன் தன் மகனை வழக்கறிஞராக பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.. ஆனால் பள்ளி படிப்பு முடித்த அவரும் வேறு ஒரு படிப்புக்கு விண்ணப்பிக்கிறார்.. இதனால் ஆத்திரம் கொள்கிறார் சரவணன்.. அப்பொழுது மகனுக்கும் அப்பாவுக்கும் தகராறு எழுந்த நிலையில் உங்களைப் போல நானும் ஒரு வக்கீலாக தோற்க முடியாது என சண்டை போடுகிறார்..

முடிந்தால் ஒரு வழக்கை எடுத்து நீங்கள் அதில் ஜெயித்துக் காட்டுங்கள் என சவால் விடுகிறார் மகன்.. இதனையடுத்து மகளைக் காணாத வழக்கில் தீக்குளித்த தந்தையின் வழக்கை எடுத்து அதில் போராடுகிறார் நாயகன் சரவணன்..

 

ஆனால் அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில் என்ன செய்தார்.. அந்த வழக்கு வென்றதா.? மகனின் சவாலில் ஜெயித்தாரா தந்தை.? அந்த வழக்கில் இருந்த பிரச்சனைகள் என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

பருத்திவீரன் படத்திற்குப் பிறகு சித்தப்பு அறியப்பட்ட சரவணன் இனி வக்கீல் சரவணன் என்று சொன்னால் ஆச்சரியம் இல்லை.. ஒரு முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து இந்த சட்டமும் நீதிக்கு பலம் சேர்த்து இருக்கிறார்.. கோர்ட்டில் அவர் நிதானமாக வாதாடும் ஒவ்வொரு காட்சியும் சிறப்பு..

முக்கியமாக வசனங்களும் நெத்தியடி.. ஒரு காட்சியில்.. “எப்போதும் சத்தம் போட்டு பேசினால் நம் வார்த்தைகளுக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும்” என்ற வசனங்கள் பளிச்சிடுக்கிறது.

ஜூனியர் வக்கீலுக்கே உரித்தான அத்தனை விஷயங்களையும் உடல் மொழியால் அழகாக்கி இருக்கிறார் நம்ரிதா..

குப்புசாமியாக சண்முகம், வெண்ணிலாவாக இனியா ராம், வள்ளியாக விஜயஶ்ரீ ஆகியோர் குறை இல்லாத நடிப்பை கொடுத்துள்ளனர்…

டெக்னீசியன்ஸ்…

விபின் பாஸ்கரின் பின்னணி இசை பலம்.. வழக்கு வாய்தா ஜாமீன் என்று இழுக்காமல் அளவோடு வாசித்து இருக்கிறார்..

இது ஒரு வெப் சீரிஸ் தானே என்று ஒவ்வொரு எபிசோடையும் நீட்டிக்காமல் கச்சிதமாக கட்டிங் செய்திருக்கிறார் எடிட்டர் ராவணன்..

நீதிமன்ற வளாகத்தை இன்ச் பை இன்ச் அளந்து அழகாக படம் எடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கோகுலகிருஷ்ணன்..

நோட்டரி பப்ளிக் சரவணன் ஏன் அனைவரும் கிண்டல் அடிக்கின்றனர்.. அவர் இதற்கு முன்பு எந்த வழக்கில் வாதாடினார் தோற்றார் என்பதற்காக காரணங்கள் இல்லை..

நீதிமன்றம் வழக்கு விசாரணை என்றால் கமர்சியல் சேர்த்து ஹீரோயிஸம் காட்டியிருப்பார்கள்.. ஆனால் சரவணன் வைத்து அழகான ஒரு கோர்ட் டிராமாவை படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் சூர்யா பிரதாப்..

ஜூலை 18 தேதி முதல் ஜீ 5 OTT தளத்தில் இது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது..

 

Sattamum Needhiyum web series review