ரஜினியின் ரீல் மருமகன் நடிக்கும் ஹார்டின்..; ‘ப்ரேமம்’ மடோனா ஜோடி
ரஜினியின் ரீல் மருமகன் நடிக்கும் ஹார்டின்..; ‘ப்ரேமம்’ மடோனா ஜோடி
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் ‘ஹார்ட்டின்’
‘மகான்’, ‘பேட்ட’, புகழ் சனந்த் இதில் நாயகனாக நடிக்கிறார். இவர் பேட்ட படத்தில் ரஜினியின் மருமகனாக நடித்தவர்..
Heartin ‘ஹார்ட்டின்’ படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு ‘சுழல்’ இணையத் தொடர் மற்றும் ‘கொலைகாரன்’ புகழ் முகேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘நேரம்’, ‘பிரேமம்’ மலையாள படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.
படத்தொகுப்பை ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ புகழ் பரத் விக்ரமன் கையாள, கலை இயக்கத்தை ஜி துரைராஜ் மேற்கொண்டுள்ளார்.
உத்தரா மேனன் ‘ஹார்ட்டின்’ படத்தின் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை ஜூன் 16ஆம் தேதி திரை பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற உள்ளது..

இந்தப் படத்தை அடுத்த வாரம் ஜூன் 26 ஆம் தேதி திரையரங்குகளில் திரையிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்..
Sananth and Madonna starring Heartin Audio launch updates

