RED LABEL – ரெட் லேபிள் விமர்சனம்… கல்லூரியில் கலந்த அரசியல்
RED LABEL – ரெட் லேபிள் விமர்சனம்… கல்லூரியில் கலந்த அரசியல்
கதை..
கோவையில் உள்ள பிரபல கல்லூரியில் எம்எல்ஏ உதயகுமாரின் மகன் மற்றும் மகள் இருவரும் படிக்கின்றனர்.. இதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் லெனினை காதலிக்கிறார் நாயகி அஸ்மின்..
இந்த நிலையில் நாயகியின் தம்பியும் மற்றொரு மாணவனும் கல்லூரி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.. தன் தம்பியாக இருந்தாலும் அவனின் கேரக்டர் சரியில்லை என்பதால் போட்டி மாணவனுக்கு ஆதரவு தருகின்றனர்..
இதில் வெளி அரசியலும் கலந்து இருப்பதால் அந்த கல்லூரியில் பர்னிச்சர் ஒர்க் செய்வது போல உள்ளே வந்து தேர்தல் பணிகளை கவனிக்கிறார் லெனின்..
இந்த பிரச்சனை ஒரு பக்கம் இருக்க திடீரென மகளுக்கு நிச்சயம் ஏற்பாடு செய்கிறார் எம்எல்ஏ.. அதன் படி திருமணம் நிச்சயதார்த்தமும் நடந்துவிடுகிறது..
அப்போது ஒரு பிரச்சனையில் கல்லூரி வளாகத்தில் வைத்து எதிர்பார விதமாக மாப்பிள்ளையை அடித்து கொன்று விடுகிறார் லெனின்..
ஏற்கனவே நிறைய வழக்குகள் நாயகன் மீது நிலுவையில் இருக்க இந்த பிரச்சனையிலிருந்து அவர் தப்பிக்க திட்டமிடுகிறார்.. அடுத்தது என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…
Lenin, Azmin, R.V. Udhayakumar, Munishkanth, Anu Mohan and Others
நாயகன் லெனின்க்கு அறிமுகக்காட்சி அசத்தல்.. இவர் தயாரிப்பாளர் என்றாலும் கல்லூரி காட்சிகளை பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்.. இவருக்கு ஆக்க்ஷன் கை கொடுத்த அளவிற்கு ஆக்டிங் கை கொடுக்கவில்லை..
நாயகியாக அஷ்மின்.. தப்பை தட்டிக் கேட்கும் இவரது குணம் பெண்களுக்கும் பிடிக்கும்..
முனிஷ்காந்த் ஓரிரு காட்சிகளில் வருகிறார்.. அரசியல்வாதியாக RV உதயகுமார்.. எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. நீண்ட நாட்களுக்கு பிறகு அனுமோகன்.. ஓவர் காமெடியில் கடிக்காமல் சில காட்சிகளை சிரிக்க வைக்கும் முயற்சித்திருக்கிறார்..
![]()
தொழில்நுட்ப கலைஞர்கள்…
Music Director: Kailas Menon
Singers : Chinmayi sripada , Velmurugan , Kavitha gopi
Cinematographer : Sathish Maiappan
Editor: Lawrence Kishore
Art: Pragadheeswaran
காளிதாஸ் இசையமைத்துள்ளார்.. பாடல்களும். பின்னணி இசையும் ரசிக்கும்படியாக இருக்கிறது.. லெனின் & அஸ்மின் டூயட் பாடல் வரிகள் சிறப்பு..
சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவில் கல்லூரி காட்சிகளை கலர்ஃபுல்…
Fight Choreographer: Phantom Pradheep
Publicity Design: Sri Aravind kesavan (SAK STUDIO)
Pro: Sridhar Raju, Udaya Kumar, Hari Babu
Banner: REVGEN FILM FACTORY
Written by: Pon Parthiban
Directed by: K.R. Vinoth
Produced by: Lenin
பொன் பார்த்திபன் திரைக்கதைக்கு கமர்சியல் வடிவம் கொடுத்து இருக்கிறார் கே ஆர் வினோத்.. தேர்தல் எங்கு நடந்தாலும் கல்லூரியில் நடந்தாலும் அதிலும் போட்டி பொறாமை இருக்கும் என்பதை காட்சிப்படுத்தி இருக்கிறார்..
அரசியல்வாதிகள் தங்கள் அதிகார திமிரை குடும்பத்திலும் கல்லூரியிலும் எங்கு வேண்டுமானாலும் காட்டுவார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்..
வெறுமனே காதல் கதையாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திரைக்கதை திடீரென அரசியல் களமாகவும் திடீரென கொலையை மறைக்கும் திரில்லர் கதையாக மாறியிருப்பது சிறப்பு.. ஒரே ரூட்டில் பயணிக்காமல் அடுத்தடுத்து திருப்பங்களுடன் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கே ஆர் வினோத்..
Red Label movie review

