ராமராஜனின் ‘கடவுள் தந்த பரிசு’ படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல் தந்த இசைக்கடவுள்..; ‘கரகாட்டக்காரன்’ ரீ ரிலீஸ்
ராமராஜனின் ‘கடவுள் தந்த பரிசு’ படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல் தந்த இசைக்கடவுள்..; ‘கரகாட்டக்காரன்’ ரீ ரிலீஸ்
ஒரு பாடலுக்கு ஆறுமாதம் போராடுகிறவர்களுக்கு மத்தியில், தனது “கடவுள் தந்த பரிசு” திரைப்படத்திற்காக ஒரே நாளில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்து, அடுத்த ஆறு நாட்களில் அற்புதமான ஆறு பாடல்களையும் பிரமிக்கத்தக்க வகையில் பதிவு செய்து கொடுத்துள்ளார் இளையராஜா..
எனவே இசைஞானியை ராமராஜன், ‘கடவுள் தந்த பரிசு’ இயக்குநர் காசிமாயன், வசனகர்த்தா ராஜகோபால், தயாரிப்பு நிர்வாகி ராம் பிரபு ஆகிய படக்குழுவினருடன் சந்தித்து, தனது நன்றியைத் தெரிவித்து, தான் கடவுளாக மதிக்கும் இளையராஜாவிடம் ஆசி பெற்றார் ராமராஜன்..
காசிமாயன் கதை, திரைக்கதை எழுதி, இயக்குகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
விரைவில் படப்பிடிப்பை துவங்கவிருக்கும் படக்குழுவினர், ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்..
கூடுதல் சிறப்பு செய்தி –
————————————
‘கரகாட்டக்காரன்’ ரீ-ரிலீஸ்!
37 ஆண்டுகளுக்கு பிறகு, டிஜிட்டல் தொழில்நுட்பம், சினிமாஸ்கோப், DTS ஒலியுடன் வருகிறது மக்கள் நாயகன் ராமராஜன் நடித்த ‘கரகாட்டக்காரன்’!
1989 காலகட்டங்களிலேயே பெரும் வசூல் புரட்சி செய்த ‘கரகாட்டக்காரன்’ மீண்டும் வசூல் சாதனை செய்ய வருகிறது!
நவீன டிஜிட்டல் மறு உருவாக்கம், சினிமாஸ்கோப், மற்றும் DTS ஒலி உருவாக்கப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அதிவிரைவில் திரையரங்குகளை ஆர்ப்பரிக்க வருகிறார் ‘கரகாட்டக்காரன்’
Ramarajan starrer Karakattakaran re release in digital

