‘ராமம் ராகவம்’ விமர்சனம் 3.5/5… தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.. மீண்டும் நிரூபணம்

‘ராமம் ராகவம்’ விமர்சனம் 3.5/5… தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.. மீண்டும் நிரூபணம்

 

‘ராமம் ராகவம்’ விமர்சனம் 3.5/5… தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.. மீண்டும் நிரூபணம்

 

 

ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் & தெலுங்கில் 100+ படங்களுக்கு மேல் நடித்துள்ள தன்ராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’.

ஸ்டோரி…

கடலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் நேர்மையாக பணிபுரிகிறார்.. லஞ்சத்திற்கு எதிரானவர் சமுத்திரக்கனி.. இவருக்கு ஒரே மகன் தன்ராஜ்.. மகன் கொஞ்சம் கூட பொறுப்பில்லாதவர்.. ஊர் சுற்றி திரிந்து திருட்டு வேலைகள் செய்து இப்படியாக பல வழிகளில் தந்தைக்கு தொல்லை கொடுத்து வருகிறார்.

ஒரு நாள் இவரின் பிரச்சனைக்காக தன் அப்பாவின் கையெழுத்தைப் போட்டு 10 லட்சத்தை லஞ்சமாக வில்லன் சுமனிடம் இருந்து பெறுகிறார் தன்ராஜ்.. இதனை அறியும் சமுத்திரக்கனி தன் மகனையே போலீசில் பிடித்து கொடுத்து விடுகிறார்..

ஜாமீனில் வெளியே வரும் மகன் இனி தந்தை இருந்தும் பயன் இல்லை.. தந்தையை கொன்று விட்டால் அவரின் அரசு வேலை கிடைத்துவிடும்.. அவரின் ஒட்டுமொத்த இன்சூரன்ஸ் பணம் கிடைத்துவிடும்.. நாம் நினைத்த மாதிரி வாழலாம் என்று திட்டம் போடுகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? தன் தந்தை சமுத்திரக்கனியை கொன்றாரா? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

தந்தை தசரத ராமனாகவே வாழ்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி.. எங்கும் மிக இல்லாத நடிப்பை கொடுத்து தன் மகனுக்காக தன் குடும்பத்திற்காக நேர்மையாக வாழ்ந்து நம் மனதில் நிறைகிறார்.. கிளைமாக்ஸ் இல் சமுத்திரக்கனி செய்யும் விஷயங்களும் அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும் நிச்சயம் நம் மனதை கலங்கடிக்கும்..

சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிரமோதினி.. ஒரு பக்கம் பொறுப்பான கணவன்.. ஒரு பக்கம் பொறுப்பற்ற மகன்.. என்ற தவிப்பில் பிரமோதினி பிரமாதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மலையாளம் நடிகை மோக்ஷா இதில் நாயகியாக வருகிறார்.. நாயகனை வெறுக்கும் காட்சியில் அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

அனுமன் பக்தராக பைனான்ஸ் நடத்துபவராகவும் வருகிறார் வில்லன் சுனில்.. டெரராக இருந்தாலும் சாந்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

சத்யாவும், பாலிரெட்டி பிருத்துவிராஜும் நகைச்சுவைக்கு உதவியுள்ளனர்.

நீண்ட நாட்களாக திரையில் காண முடியாத ஹரிஷ் உத்தமன் இதில் பாண்டிச்சேரி தேவாவாக லாரி டிரைவராக கனமான பாத்திரத்தை எடுத்து இருக்கிறார்.. அவரது தோற்றமும் பக்காவாக பொருந்திருக்கிறது..

டெக்னீசியன்ஸ்…

அருண் சிலுவேருவின் பின்னணி இசை பாச உணர்வை உயிரோட்டத்துடன் கொடுத்திருக்கிறது..

‘குலசாமி போல’ என்ற யுகபாரதியின் பாடலும், க்ளைமேக்ஸில் கவிஞர் முருகன் மந்திரத்தின் வரிகளும் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் துர்கா கொல்லிபிரசாத் : தமிழ் தெலுங்கு ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார்..

தமிழில் வசனம் எழுதியுள்ள மாலி கவனிக்க வைக்கிறார்.. பல வசனங்கள் நம் குடும்ப நினைவுகளை கொண்டு வரும்..

‘விமானம்’ படத்தின் இயக்குநர் சிவபிரசாத் யானாலாவின் கதைக்கு உயிர் கொடுத்து அசத்தியுள்ளர் தனராஜ் கொரனானி.

மகனாக (ராகவனாக) நடித்துள்ள தனராஜ், இப்படத்தை இயக்கியும் உள்ளார்.. இவரை நாயகன் இவரை இயக்குனர் என்றாலும் எந்த மாஸ் பில்டப் கொடுக்காமல் கமர்சியல் விஷயங்களையும் கலக்காமல் ஒரு தந்தை மகன் உறவை வித்தியாசமாக சொல்லியிருக்கிறார்.

தந்தையை கொல்ல எந்த மகனாக திட்டமிடுவாரா? என்ற கேள்வி வரலாம்.. ஆனால் இது போன்ற செய்திகளை நாம் தினம் தினம் டிவி செய்தியில் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம்..

சமுத்திரக்கனி கேரக்டரை பார்த்து இப்படி ஒரு அப்பா கிடைக்க மாட்டாரா? என ஏங்கும் வேலையில் தன்ராஜ் கேரக்டரை பார்த்து இப்படி ஒரு மகன் தேவையே இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் எழும்.. அப்படி ஒரு நடிப்பை இருவரும் கொடுத்திருக்கின்றனர்.

இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார்.

ஆக இந்த ராமம் ராகவம்.. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது..

Ramam Raghavam movie review