ராஜபுத்திரன் விமர்சனம்..; பாசக்கார அப்பா
ராஜபுத்திரன் விமர்சனம்..; பாசக்கார அப்பா
ஸ்டோரி…
தன்மகன் வெற்றி பிறந்தது முதலே அவன் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார் அப்பா பிரபு.. ஒரு கட்டத்தில் மகனை பள்ளி ஆசிரியர் அடித்து விட்டதால் படிக்கவும் வேண்டாம் என்று வளர்த்து வருகிறார்.. தன் மகன் வேலை செய்து கஷ்டப்படக் கூடாது என்று வேலைக்கும் அனுப்பாமல் வளர்த்து வருகிறார்..
இதனால் தந்தைக்குத் தெரியாமல் சின்ன சின்ன வேலைகள் செய்து வருகிறார் வெற்றி.. ஒரு கட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை அப்பாவுக்கு தெரிய வரவே அதுவே குடும்பத்திற்கு பிரச்சினையாகி விடுகிறது..
அந்தப் பண பிரச்சனையில் இருந்து தன் மகனைக் காப்பாற்ற வீட்டை அடமானம் வைக்கிறார் பிரபு.. ஒரு கட்டத்தில் அப்பாவின் பிடிவாத பாசத்தால் வெளியூர் சென்று சம்பாதிக்க நினைக்கிறார் வெற்றி..
அதன் பிறகு என்ன நடந்தது.? மகன் வெற்றிக்காக அவனை வெளியூருக்கு அனுப்பி வைத்தாரா அப்பா.? அந்த பண பிரச்சினை என்ன ஆனது.? வீடு அடமானத்தை மீட்டாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
பிரபு (செல்லையா)
வெற்றி (பட்ட முத்து)
கிருஷ்ணபிரியா (பூச்செண்டு)
பாசக்கார அப்பாவாக தன் கேரக்டருக்கு உயிரூட்டி இருக்கிறார் பிரபு.. ஆனால் பொறுப்பான தந்தை இப்படியா பாசம் வைப்பது? எனவும் கேட்க வைக்கிறார்.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் வெற்றி இந்த படத்தில் தானும் ஒரு கமர்ஷியல் வழிக்கு வந்து விட்டாரோ என்ன தோன்றுகிறது.. அன்பான காதலன் பாசமான மகன் தன் கேரக்டரில் வெற்றி ‘வெற்றி’ பெறுகிறார்..
பெரிய பெரிய ஹீரோயினுக்கெல்லாம் இப்படி ஒரு அறிமுக காட்சி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.. இந்த கிருஷ்ண பிரியா கில்லியாக அறிமுகம் கொடுத்திருக்கிறார்.. அதைத் தொடர்ந்து வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் பூச்செண்டு என்ற கேரக்டர் போல பூச்செண்டாகவே தன் கேரக்டரில் மணக்கிறார் கிருஷ்ண பிரியா..
நிஜத்தில் பார்ப்பதை விட திரையில் மெச்சூரிட்டி பெண்ணாக அழகாக வசீகரம் செய்கிறார்… இந்த ராஜபுத்திரனுக்கு ஏற்ற ராஜபுத்திரியாக ஜொலிக்கிறார்..
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிரட்டல் வில்லன் கோமல் குமார்.. இவர் வரும் கட்சியில் எல்லாம் சிகரெட் புகை தான்.. மாஸ் காட்டி இருக்கிறார்..
இவர்களுடன் மன்சூர் அலிகான் ( வட்டி)
ஆர்.வி.உதயகுமார் (பெருமாள்)
லிவிங்ஸ்டன் (மீசை)
இமான் அண்ணாச்சி (சுந்தரம்)
தங்கதுரை (குவைத் குமரேசன்).. ஆகியோரும் தங்கள் கேரக்டரில் பளிச்சிடுகின்றனர்.. முக்கியமாக வெற்றியுடன் வரும் அந்த குள்ள மனிதரும் தன் நடிப்பில் கவனிக்க வைக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
இயக்குனர் :மகா கந்தன்
ஒளிப்பதிவு :ஆலிவர் டெனி
இசை :
எஐஎஸ் . நௌஃபல் ராஜா
பாடல்கள் வைரமுத்து, மோகன் ராஜன்
கலை இயக்கம் : ஐயப்பன்
சண்டை :ராகேஷ் ராக்கி
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு
தயாரிப்பு: கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர் :K.M சபி
இணை தயாரிப்பாளர்கள்:
T. பாரூக்கு
K. கோதர்ஷா
படத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.. வில்லன் கோமல் குமார் கொல்லப்படும் அந்த கிணற்று காட்சி வேற லெவல்.. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு கலர்ஃபுல்..
மகாகந்தன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார்.. வழக்கமான தந்தை மகன் பாசத்தை காட்டும் படமாக இருந்தாலும் கிளைமாக்ஸில் இவர் வைத்த டெஸ்ட் எதிர்பாராத ஒன்று.. அதுவே இந்த ராஜபுத்திரனுக்கு ஒரு ஹைலைட்டாக அமைந்திருக்கிறது..
அப்பாவுக்கு மகனுக்கும் இன்னும் உணர்வு பூர்வமான காட்சிகளை வைத்து உறவை சொல்லும் உன்னத படமாக கொடுத்திருக்கலாம்..
Raja puthiran movie review

