Promise ப்ராமிஸ் விமர்சனம்..

Promise ப்ராமிஸ் விமர்சனம்..

 

Promise ப்ராமிஸ் விமர்சனம்..

 

ஸ்டோரி…

வழக்கமான ஒரு காதல் கதையாக தொடங்குகிறது நாயகன் நாயகியை (அருண் – நதியா) காதலிக்கிறார்.. உன்னை எந்த சூழ்நிலையும் கைவிட மாட்டேன் என இருவரும் பிராமிஸ் செய்து கொள்கின்றனர்..

இருவர் வீட்டிலும் பிரச்சனை.. எனவே ஒரு கட்டத்தில் சில கருத்து வேறுபாடு ஏற்படுவதால் நாயகி பிரிந்து செல்கிறார். அந்த சூழ்நிலையில் ஒரு பெண்ணை பிரிந்து சென்றால் அடுத்த பெண்ணை தேட வேண்டும் என தவறான வழிகாட்டுதலின் பேரில் விபச்சாரியை தேடி செல்கிறார் நாயகன் அருண்.. மேலும் மதுவுக்கு அடிமையாகிறார்… இந்த சூழ்நிலையில் நண்பர்கள் காதலி காதலன் இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கின்றனர்..

அதன் பின்னர் இருவரும் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.. அதன்படி இருவரும் புது வாழ்க்கையை தொடங்கி சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்… அப்போது மனைவி கர்ப்பமாகிறார்.. மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் போது தான் நாயகனுக்கு HIV+ (எய்ட்ஸ்) நோய் இருப்பது தெரிய வருகிறது..

அதன் பின்னர் நாயகன் என்ன செய்தார்..? காதலியை கைவிட்டாரா அல்லது அதை மறைத்து வாழ்ந்தாரா? பிறக்கப் போகும் குழந்தைக்கு அந்த நோய் தொற்றிக் கொண்டதா? இந்த ப்ராமிஸ் இவர்கள் வாழ்க்கையில் எப்படி துணை நின்றது என்பதெல்லாம் மீதிக்கதை

கேரக்டர்ஸ்…

Heroine – Nathiya Somu, Hero – Arunkumar Sekaran, Sujan, Prathap, Amrish , Rajkumar, Gokul & Guna…. Ms Baskar Voice Over…

இடைவேளைக்கு முன்பு வரை ஜாலியாக செல்கிறது திரைக்கதை.. ஆனால் அதில் ஏதும் வலுவில்லை.. ஆனால் இரண்டாம் பாதிக்குப் பிறகு நாயகன் எமோஷன் காட்சிகளில் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. அருண்குமார் சேகரன் தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் நாயகன்… எனவே தன்னை முன்னிலைப்படுத்தியே காட்சிகளை பிரதானப்படுத்தி இருக்கிறார்..

தனக்கு எச்ஐவி பாசிடிவ் என்பதை மனைவியிடம் சொல்ல முடியாமல் அதில் குழந்தையும் பாதிக்கப்படுமா என எண்ணி அவர் நொறுங்கும் வேலைகளில் நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.

பக்கத்து வீட்டு பெண்ணை பார்ப்பது போல ஒரு நாயகி நதியா சோமு.. மேக்கப் இல்லாமல் எதார்த்தமான பெண்ணாகவே வந்து செல்கிறார்..

கணவன் தனக்கு துரோகம் செய்துவிட்டதை எண்ணி கலங்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

நாயகனின் நண்பர்கள்.. நாயகியின் பெற்றோர்கள் உறவினர்கள் என அனைவரும் தங்களின் பங்களிப்பை கதை ஓட்டத்திற்கு கொடுத்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

Production Amman Arts Creations & Banners – Sangamithran Production

Producer – Narayana Nagaraj & Arunkumar Sekaran

Dop – Vinoth Kumar Bft

Editing – Sriram Vignesh

Choreography – Akhila N

அகிலாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓகே ரகம்.. படத்தில் பட்ஜெட்டை பொறுத்து அது அமைந்துள்ளது..

Music – Saravana Deepan

Lyrics – Bala.. பாடலும் பாடல் வரிகளும் கவர்கின்றன… நீண்ட நாட்களுக்குப் பிறகு புரியும் படிமான பாடல் வரிகளை கேட்க முடிந்தது..

நீ பார்க்கும் பார்வை போதுமே… நானும் வாழவே… மற்றும் வலிக்குதே வலிக்குதே… ஆடியோ பாடல்கள் கவனம் பெறுகின்றன..

நாம் கொடுக்கும் சத்தியத்தை பிராமிசை ஒருவர் நம்பினால் அதற்கு நாம் உண்மையாக வாழ வேண்டும்.. அதுதான் நம் வாழ்க்கை நம்பிக்கையின் ஆதாரம் என்ற மெசேஜுடன் இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் நாயகன் அருண்குமார் சேகரன்..

படம் முடியும் தருவாயில் எம் எஸ் பாஸ்கரின் வாய்ஸ் ஓவர் கேட்க முடிகிறது.. அவரின் குரலில்…

பத்தாயிரம் ரூபாய்க்கு பத்திரம் கேட்கிற காலம் இது.. ஆனால் கொடுத்த வாக்குக்காக (ப்ரோமிஸ்..) வாழ்ந்த நபரின் உண்மை பதிவு இது..

உலகத்துல ஒருத்தரா இருக்கிறதை விட ஒருத்தருக்கு உலகமாய் இருந்து பாரு… என்ற வரிகளுடன் சத்தியத்தின் மகத்துவத்தை தன்னுடைய குரலில் பதிவு செய்கிறார் நடிகர் பாஸ்கர்..

Action Reaction Jenish Release

 

Promise movie review