போலீஸ் ஃபேமிலி விமர்சனம்… மன்னிக்காத மனிதனை துரத்தும் பகை..!
போலீஸ் ஃபேமிலி விமர்சனம்… மன்னிக்காத மனிதனை துரத்தும் பகை..!
ஸ்டோரி…
வில்லன் சரவணின் மகனை ஒரு கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்கிறார் போலீஸ் காதல் சுகுமார்.. இவர்கள் விசாரிக்கும் முறையில் அவர் இறந்து விடுகிறார்.. இந்த லாக்கப் மரணத்தை மறைக்க அவர்கள் ஒரு காட்டுப் பகுதியில் சென்று அந்த பிணத்தைப் போட்டு விடுகின்றனர்..
தன் மகனின் மரணத்திற்கு காரணமான நான்கு போலீசை பழிவாங்க துடிக்கிறார் சரவணன்.. தான் பெற்ற மரண வலியை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என ஒவ்வொரு குடும்பத்தையும் காலி செய்ய நினைக்கிறார்.
அதிலிருந்து காவலர்கள் தப்பித்தார்களா.? காவல்துறை என்ன செய்தது என்பதெல்லாம் சுவாரஸ்யமான மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
1. Raja Malaisamy as S I Raja Hero
2. Paruthiveeran Saravanan AS Dhana Villain
3. Nisha Dubey AS Anitha– HEROINE
4. Sureka R AS Viji Daughter
5. Kadhal Sukumar AS Suresh Ettu
6. Rojan Leon as Karthi – Anti HERO
7. Rathinam AS Inspector Kannan
8.Doss Santhakumar AS MLA Murthy
9. MS Selva as Kalli – Villains Assistant
சித்தப்பு சரவணன் மற்றும் காதல் சுகுமார் ஆகிய இருவரும் முகங்கள் மட்டுமே நமக்கு அறிமுகமானவை.. சரவணன் மிரட்டலான வில்லன் வேடம் என்றாலும் அவ்வப்போது வந்து செல்கிறார்.. போனில் பேசுகிறார்.. இவரின் அடியாட்களுக்கு பெரிய பங்களிப்பு..
காதல் சுகுமார் கேரக்டர் படத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனை.. முதலில் அப்பாவி போலீசாக வந்து கடைசியில் அதிரடி காட்டி இருக்கிறார்..
மற்ற போலீஸ் அதிகாரிகள்.. ரவுடிகள்.. நாயகிகளும் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…
1. PRODUCTION HOUSE : ON THE TABLE PRODUCTIONS
2. PRODUCED BY -.Malaisamy A M Raja
3. WRITTEN & DIRECTED BY -Balu .M
4. DOP -Jayakumar Thangavel
5. EDITOR – M S Selva
6. ART – Mohan
7. MUSIC – Jaya K Doss
8. LYRICS -Mahamuni and So Pa Vasanth
9. STUNTS – Dragon Josh
10. COSTUMER – SELVAM
11. PRO – John A
தன் ஆசை மகனை கொன்ற நாலு போலீசை பழிவாங்க துடிக்கும் மிகப்பெரிய தாதாவின் கதை.. பரபரப்பான பழிவாங்கும் கதை என்றாலும் படத்தின் பட்ஜெட் குறையால் தரம் குறைவாக இருப்பதை ஒவ்வொரு காட்சியிலும் காண முடிகிறது.. அதுபோல சிறந்த நடிகர்களின் பங்களிப்பு இல்லை என்பதும் பெரும் குறை..
படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் சுமார் ரகம்தான்..
இயக்குனர் பாலு.. ஒரு மனிதனுக்கு பழிவாங்கும் எண்ணம் வந்து விட்டால் அது தொடர்கதையாக இருக்கும்.. மன்னித்தால் மட்டுமே மன நிறைவான வாழ்வை பெற முடியும் என்பதை ஒரு சோசியல் மெசேஜாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்…
Police Family movie review

