பீனீக்ஸ் விமர்சனம் 3.75/5… சிறகை விரித்து சிகரத்தை நோக்கி பயணம்..
பீனீக்ஸ் விமர்சனம் 3.75/5… சிறகை விரித்து சிகரத்தை நோக்கி பயணம்..
ஸ்டோரி…
17 வயது நிரம்பிய நாயகன் சூர்யா விஜய் சேதுபதி.. சிறுவர் கூர்நோக்கு நிலையத்தில் சிறை கைதியாக இருக்கிறார்.. இவர் தொகுதி எம்எல்ஏ வை கொன்ற குற்றத்திற்காகவும் மற்ற 36 பேரை வெட்டியதற்காகவும் இவரை சிறையில் அடைக்கிறது காவல்துறை.
இந்த சூழ்நிலையில் எம் எல் ஏ வின் ஆட்கள் பலரும் கைதி என்ற போர்வையில் உள்ளே நுழைந்து சூர்யாவை கொல்லத் திட்டமிடுகின்றனர்.. ஆனால் அனைத்திலும் இருந்து தப்பித்து ஒரு பீனிக்ஸ் பறவையாக பறக்கிறார்.
இதனால் போலீஸ் இவர் யார் என்ற தோரணையில் இவரை மீண்டும் விசாரிக்கிறது.. அப்போதுதான் இவரது பின்புலமும் எம்.எல்.ஏவை இவர் கொன்றதற்கான காரணங்கள் எல்லாம் தெரிய வருகிறது.. அப்படி என்றால் இவர் யார்.? இவர் எம்எல்ஏவை கொல்ல என்ன காரணம் என்பதெல்லாம் பிளாஷ்பேக்..
கேரக்டர்ஸ்…
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா இதற்கு முன்பே சிறுவயதில் சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.. ஆனால் இதில் முதல் முறையாக கதையின் நாயகனாக உருவெடுத்து இருக்கிறார்..
கதை நாயகன் என்பதற்காகவே உடலை மெனக்கட்டு வருத்தி உடல் கம்பீரத்துடன் காணப்படுகிறார்.. அதே சமயம் ஆக்ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.. காதலியும் வேண்டாம் காதலும் வேண்டாம் என நாயகன் முடிவெடுத்து இருப்பது பாராட்டுக்குரியது..
இடைவேளை வரை அனல் அரசு இயக்கத்தில் சூடு பறக்கிறது.. தன்னுடைய கதைக்கு ஏற்ப நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். இயக்குனர் ஸ்டென்ட் மாஸ்டர் அனல் அரசு..
வரலட்சுமி, தேவதர்ஷினி, அபி நக்ஷத்ரா, சம்பத் ராம், முத்துக்குமார் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் சிறந்த நடிப்பை வாங்கி இருக்கிறார் நிற்கின்றனர்..
இவர்களுடன் திலீபன், காக்கா முட்டை விக்னேஷ், ஹரிஷ் உத்தமன், அஜய் கோஷ், வேல்ராஜ், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலரும் ஜொலிக்கின்றனர்..
முக்கியமாக விக்னேஷ் &:அபி நக்ஷத்ரா ரொமான்ஸ் கொஞ்ச நேரம் என்றாலும் காதலர்களை கவரும்..
டெக்னீசியன்ஸ்…
தயாரிப்பு : பிரேவ்மேன் பிக்சர்ஸ்
இயக்கம் : அனல் அரசு
நடிகராக மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராகவும் வேல்ராஜ் தன் பணியில் சிறப்பு.. சிறார் கூர்நோக்கு இல்லத்தில் எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை எடுத்த விதம் சிறப்பு.
பாடல்கள் விட எப்போதும் பின்னணி இசையில் தான் ஒரு ஜூனியர் ராஜா என்பதை நிரூபித்து வருகிறார் சாம் சி.எஸ்.. இதிலும் ஆக்ஷன் காட்சிகளில் இசையில் தெறிக்க விட்டுள்ளார்..
ஸ்டென்ட் மாஸ்டர் அனல் அரசு முதல் முறையாக இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.. இடைவேளை வரை ஆக்சனை திகட்ட திகட்ட கொடுத்து இருக்கிறார்..
இடைவேளைக்குப் பிறகு பிளாஷ்பேக் சென்டிமென்ட் காதல் குடும்பம் பாசம் நட்பு என அனைத்தையும் அழகாக சொல்லி அனைத்து தரப்பையும் கவரும் வகையில் இந்த பீனிக்ஸ் பறவையை பறக்க விட்டுள்ளார் அனல் அரசு.
அத்தனை ரவுடிகளும் ஹீரோவிடம் அடி வாங்குவது நம்பும்படியாக இல்லை.. அதற்கு ஹீரோ சூர்யாவின் வயது அவரது உயரமும்..
என்னதான் ஆக்ஷன் சென்டிமென்ட் இருந்தாலும் சாதி இல்லாமல் தற்போதைய படங்கள் வருவதில்லை.. இதிலும் சாதியை கொஞ்சம் நுழைத்து இருக்கிறார் டைரக்டர் அனல் அரசு..
ஜெயிக்கிறது தப்பா.. இல்ல நாங்க ஜெயிக்கிறது தப்பா.? என்ற சூர்யா சேதுபதியின் கேள்விகள் என்ற வசனங்கள் கைதட்டல்களை வரவைக்கும்..
Phoneix movie review

