பறந்து போ விமர்சனம்… பறந்து போ-கும் துன்பங்கள்
பறந்து போ விமர்சனம்… பறந்து போ-கும் துன்பங்கள்
ஸ்டோரி…
மாதத் தவணையில் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர் தம்பதிகள் சிவா & கிரேஸ் ஆண்டனி.. பெற்றோர்கள் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழ்ந்து வருவதால் அன்பு மகன் வேறு வழியின்று பூட்டிய வீட்டுக்குள் கிடந்து மன அழுத்தத்தில் புதைந்து கிடக்கிறார்..
ஒரு சூழ்நிலையில் வேலை காரணமாக கிரேஸ் வேறு ஒரு இடத்திற்கு பயணிக்கிறார்.. இந்த விடுமுறையை பயன்படுத்தி அப்பாவும் மகனும் ஒரு பைக்கில் ஊர் சுற்ற கிளம்புகின்றனர்..
அப்போது பல கிராமங்களை பார்க்கும் சிறுவன் அந்த இயற்கை நிறைந்த சூழ்நிலையில் வாழ விரும்புகிறார்.. அங்கு அவர்கள் சந்திக்கும் பிள்ளைகள் மனிதர்கள் இவர்களின் மன அழுத்த வாழ்க்கையை மாற்றுகின்றனர்..
நீங்கள் உங்கள் சிட்டி வாழ்க்கையை விட்டு கிராமத்து வாழ்க்கைக்கு வந்தால் மட்டுமே நான் வீட்டுக்கு திரும்பி வருவேன் என அப்பாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறார் மகன்..
அதன் பிறகு அப்பா என்ன செய்தார்.? மகனின் முடிவுக்கு அம்மா ஓகே சொன்னாரா.? என்பதை நகைச்சுவையாக உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் டைரக்டர் ராம்..

கேரக்டர்ஸ்…
ராம் படமாக இருந்தாலும் யார் படமாக இருந்தாலும் என் கேரக்டர் இப்படித்தான் என்பதை இந்த படத்தில் அழுத்தமாகவே பதிவு செய்து இருக்கிறார் ஹீரோ மிர்ச்சி சிவா.. ஆனால் அதே சமயம் தன்னுடைய காமெடி மீட்டரை மிகையாகாமல் பார்த்துக் கொண்டிருப்பது சிவாவின் சிறப்பு…
சிவாவின் க்ரஷ் ஆக வரும் அஞ்சலி கொஞ்ச நேரமே வந்தாலும் அசத்தல்..

நம்ம ஸ்கூல் க்ரஷ்க்கு அஜு வர்கீஸ் போல ஒரு கணவர் கிடைத்தால் நமக்கெல்லாம் ஹாப்பி தான் மச்சி..
சிவாவின் மனைவியாக மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி.. முதலில் சீரியஸ் ஆக காணப்பட்டாலும் இறுதிக்கட்ட காட்சிகளில் கணவரை சாத்தான் சாத்தான் என சிரிக்க வைக்க நானும் இருக்கிறேன் என ரகளை கட்டி இருக்கிறார்..
விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் சிறப்பு.. அதுபோல விஜய் யேசுதாஸின் மகளும் அன்பும் பேசிக் கொள்ளும் காட்சிகளும் நம்மை சிறு குழந்தை மனதுடன் ரசிக்க வைக்கிறது..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் ட்ரோன் சாட்டுகளில் அதிகம் கவனிக்க வைக்கிறார்.. முக்கியமாக அஞ்சலி குளிக்கும் அந்த குளக்கரை காட்சியும் பேரழகு.. மனம் நோகாத அளவிற்கு படத்தொகுப்பை செய்து இருக்கிறார் மதி.
படத்தில் 20 பாடல்களா.? என ஆச்சர்யப்பட்டாலும் சின்ன சின்ன பாடல்களை குழந்தை மனதோடு எழுதி அழகான வரிகள் அமைத்து அதற்கு சந்தோஷ் தயாநிதி இசையும் படத்திற்கு பலம்..
எமோஷனலாக கதைகளை சொல்பவர் டைரக்டர் ராம்.. சீரியஸ் கதை என்றாலும் அதை காமெடியாக்கி விடுபவர் ஹீரோ சிவா.. இவர்கள் கூட்டணி எப்படி? என எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் படம் முழுக்க சிரிப்பு மழை..
நம் கவலைகள் எல்லாம் ‘பறந்து போ’கும் மனநிலையில் தியேட்டரை விட்டு வெளியேற வைக்கிறார் இயக்குனர் ராம்..
Parandhu Po movie review

