Once Upon a Time in Madras விமர்சனம் 3.5/5..
Once Upon a Time in Madras விமர்சனம் 3.5/5..
நான்கு நபர்களின் கையில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி கிடைக்கிறது. அதன் பிறகு அவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை சொல்லி இருக்கிறார் அறிமுக இயக்குனர் பிரசாத் முருகன்.
ஸ்டோரி…
1) தனது மகள் பவித்ரா தன் பேச்சைக் கேட்காமல் காதலனை கரம் பிடிக்க முற்படுகிறார்.. இதனை அறியும் தந்தை தலைவாசல் விஜய் கையில் துப்பாக்கி கிடைக்கிறது.. அதன் பிறகு அவர் என்ன செய்தார்?
2) துப்புரவு பணியாளர் அபிராமி.. இவரது மகன் திருநங்கையாக மாறி மருத்துவம் படிக்க மருத்துவ படிப்பிற்காக ஒரு வட்டிகாரனிடம் கடன் வாங்குகிறார் அபிராமி.. ஆனால் வட்டி பணம் கட்ட முடியாமல் நெருக்கடியில் சிக்கிக் கொள்ள அந்த சமயத்தில் அபிராமி கையில் துப்பாக்கி கிடைக்கிறது.. பிறகு என்ன நடந்தது?
3) கூலிப்படையில் ஒருவராக இருக்கும் பரத் திருந்தி காதல் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். அந்த சமயத்தில் மனைவியின் சிகிச்சைக்கு பெரியளவில் பணம் தேவைப்படுகிறது.. அப்போது வேறு வழியின்றி இவரது கையில் துப்பாக்கி கிடைக்கிறது.. பிறகு என்ன நடந்தது.?
4) ஒரு பெரிய பணக்கார வீட்டுக்கு திருமணமாகி மருமகளாக செல்கிறார் அஞ்சலி.. அடுத்த நாளே இவரது இல்லற வாழ்க்கை தாம்பத்ய உறவுக்கு பிரச்சினை வருகிறது.. அந்த சமயம் இவரது கையில் துப்பாக்கி சிக்குகிறது.. பிறகு என்ன நடந்தது.?
இந்த நாலு கதைகளையும் ஹைப்பர் லிங்க் திரில்லர் படமாக திரைக்கதை அமைத்து கனெக்ட் செய்து இருக்கிறார் இயக்குனர்.
அடுத்தது என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
பரத் – ராஜா
அபிராமி – சாவித்ரி
தலைவாசல் விஜய் – நாதன்
ராஜாஜி – அருள் ஜோதி
கனிகா – கெளசி
ஷான் – கதிர்
கல்கி – இஸ்மாயில்
பவித்ரா லக்ஷ்மி – அனிதா
அஞ்சலி நாயர் – மதி
PGS – மூர்த்தி
அரோல் டி சங்கர் – சுப்ரமணி
வித்தியாசமான கெட்டப்பில் வித்தியாசமான வேடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் பரத்..
முன்னணி நடிகைகள் ஏற்க தயங்கும் துப்புரவு பணியாளர் வேடத்தில் தூய்மையான நடிப்பை கொடுத்திருக்கிறார் அபிராமி.. திருநங்கையாக மாற நினைக்கும் தன் பிள்ளையை அரவணைக்கும் அன்பில் அசத்தல் ராமி..
அப்பாவின் பேச்சை கேட்கும் அஞ்சலி ஒரு கட்டத்தில் தனக்கு எதிரான சதியை முறியடிக்கும் காட்சியில் சிங்க பெண்ணாக தைரியமூட்டுகிறார்..
தலைவாசல் விஜய், கல்கி, ராஜாஜி, கனிகா, எம்.ஜெகன் கவிராஜ், அரோல் டி.சங்கர், ஷான், பி.ஜி.எஸ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் சிறப்பு..
டெக்னீசியன்ஸ்…
எழுத்து & இயக்கம் – பிரசாத் முருகன்
தயாரிப்பு – Friday Film Factory
கேப்டன் M.P. ஆனந்த்
இணை தயாரிப்பு – Dream House, ஹாரூன்
PGS Productions, P. G. சரவணன்
ஒளிப்பதிவு – K.S. காளிதாஸ் & கண்ணா.R
இசை – ஜோஸ் பிராங்க்ளின்
படத்தொகுப்பு – ஷான் லோகேஷ்
கலை இயக்குநர் – V. K. நடராஜன்
வசனம் & பாடல்கள் – M. ஜெகன் கவிராஜ்
சண்டை பயிற்சி – சுகன்
நடனம் – ஷாம்
மக்கள் தொடர்பு – K.S.K செல்வகுமார், மணிமதன்
இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் இசை & பின்னணி இசை மனதுக்கு இதமே..
ஒளிப்பதிவாளர்கள் கே.எஸ்.காளிதாஸ் & கண்ணா.ஆர் திரைக்கதைக்கு ஏற்ப கேமராவை கையாண்டிருப்பது சிறப்பு..
வசனம் எழுதுபவர்களுக்கு பாடல் எழுதுவது கடினம்.. பாடலாசிரியருக்கு வசனம் எழுதுவது கடினம்.. ஆனால் ஒரு சிலருக்கே இந்த 2 குதிரையிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்யும் திறமை இருப்பதுண்டு.. என்னால் 3 குதிரையிலும் சவாரி செய்ய முடியும் என நடிப்பிலும் வசனத்திலும் பாடல்களிலும் தன் திறமையை காட்டி இருக்கிறார் ஜெகன் கவிராஜ்..
கம்யூனிசத்தின் மூலம் காதலர்களை கூட கவர்ந்திருக்கிறார் ஜெகன் கவிராஜ் சேகுவாரா மற்றும் தேசம் இல்லாத பாடல் மூலம் கவனம் ஈர்க்கிறார்..
துப்பாக்கியை மையப்புள்ளியாக வைத்து அதற்கு ஏற்ப கேரக்டர்களை தேர்ந்தெடுத்து சரியான நடிகர்களை பொருத்தி சமூக பொறுப்புணர்வுடன் ஓர் அழகான திரைக்கதை அமைத்திருக்கிறார் பிரசாத் முருகன்.. அதை கமர்சியல் சமரசம் இல்லாமல் நேர்த்தியாக சொல்லி இருப்பதும் பாராட்டுக்குரியது..
தனது முதல் படத்திலேயே குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுக்க முடியும் என தயாரிப்பாளராக ஜெயித்திருக்கிறார் கேப்டன் ஆனந்த்..
Once Upon a time in Madras movie review
—–

