ஓஹோ எந்தன் பேபி விமர்சனம்
ஓஹோ எந்தன் பேபி விமர்சனம்
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரோமியோ பிக்சர்ஸ் வெளியீட்டில் ‘ஓஹோ எந்தன் பேபி’..
ஸ்டோரி…
இயக்குனர் மிஷ்கின் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறார் நாயகன் ருத்ரா.. ஒரு நாள் நடிகர் விஷ்ணு விஷாலை சந்தித்து அவரிடம் கதை சொல்லி கால்ஷீட் கேட்கிறார்..
ஆனால் விஷ்ணுவுக்கு கதை திருப்தி இல்லை.. எனவே தன் சொந்த காதல் கதையை நடிகரிடம் சொல்கிறார் ருத்ரா..
அதன் பிறகு என்ன நடந்தது.? இவரின் காதல் கதையை விஷ்ணு ஏற்றுக் கொண்டாரா.? நடிக்க ஒப்புக் கொண்டாரா.? இறுதியில் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
விஷ்ணு விஷால், ருத்ரா, மிதிலா பால்கர், வைபாவி டாண்ட்லே, கருணாகரன், ரெட்டிங்டன் கிங்ஸ்லி, இயக்குநர் மிஷ்கின், கஸ்தூரி விஜய் சாரதி மற்றும் கிருஷ்ணகுமார்.
முதல் படத்தில் முத்திரை பதிக்க வேண்டும் என்று நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார் நாயகன் ருத்ரா.. அதிலும் பாஸ் மார்க் பெறுகிறார்.. ரொமான்ஸ், தயக்கம் என உள்ளிட்ட உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்..
நாயகிகளாக மிதிலா பால்கர், வைபாவி டாண்ட்லே.. இருவரும் அழகிலும் நடிப்பிலும் கவர்கின்றனர்.. மிதிலா துள்ளலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. வைபாவி மனதிற்கு நெருக்கமான அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
இயக்குனராக மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி வரும் இடங்கள் கலகலப்பு, கருணாகரன், கஸ்தூரி, கீதா கைலாசம் ஆகியோரும் நிறைவான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
தன் தம்பிக்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் நடிகராகவே விஷ்ணு விஷால்..

டெக்னீசியன்ஸ்…
இன்றைய இளைஞர்களை குறிவைத்து கலர்ஃபுல்லான லவ் ஸ்டோரியை கொடுத்திருக்கிறார் டைரக்டர் ஆர்.சி.பிரணவ் கிருஷ்ணகுமார்..
ஜென் மார்டின் இசையில் பாடல்கள் ஆட்டமும் தாளமும் போட வைக்கிறது.. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு ஆர்வத்தோடு ரசிக்க வைக்கிறது..
இன்றைய இளசுகள் காதலையும் காதல் முறிவுகளையும் எப்படி எதார்த்தமாக எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள்.. வாழ்க்கையில் காதல் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை ஜாலியாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் கிருஷ்ணகுமார் ராகுமார்..
ஜாலியா வாங்க ஜாலியா போங்க என்ற என்ற கான்செப்ட் உடன் இந்த ‘ஓஹோ எந்தன் பேபி’-யை ரசிக்கலாம்..
Oh Enthan Baby movie review

