நாங்கள் விமர்சனம்.. தடாலடி தந்தை
நாங்கள் விமர்சனம்.. தடாலடி தந்தை
ஸ்டோரி…
கணவன் – மனைவி இவர்களுக்கு மூன்று ஆண் மகன்கள்.. ஈகோ பிரச்சினையால் கணவன் மனைவி இருவரும் பிரிந்திருக்கும் நிலையில் கண்டிப்பான தந்தையுடன் மூன்று மகன்களும் வளர்கிறார்கள்..
இதுவரை தமிழ் சினிமா இப்படி ஒரு தந்தையை பார்த்திருக்குமா என்று தெரியாது.. மகன்கள் முன்னிலையில் புகை பிடிப்பது மது அருந்துவது ஒரு அடியாள்களை கொடுமைப்படுத்துவது போல பல வேலைகளை வாங்குகிறார் நாயகன் (தந்தை).
அம்மாவின் அன்பு கிடைக்காத அந்த பிள்ளைகளின் நிலை என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ் மற்றும் டெக்னீசியன்ஸ்..
ஒரு ஆவண படமாக எடுக்க வேண்டிய படத்தை கிட்டத்தட்ட 3 மணி நேரமாக ஒரு சீரியல் போல இழுத்து கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் அவினாஷ்.
நாங்கள் படத்தினை, ‘கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில், ஜிவிஎஸ் ராஜு தயாரித்துள்ளார்.
இயக்குனர் அவினாஷ் பிரகாஷ் எழுதி இயக்கியிருப்பதோடு, ஒளிப்பதிவினையும் மேற்கொண்டுள்ளார். வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ளார்.
கண்டிப்பான தந்தையாக அப்துல் ரபே.. இப்படி ஒரு தந்தையா.? இவரைப் பார்த்தாலே நமக்கே அடிக்கணும் போல தோன்றும் நடிப்பை கொடுத்திருக்கிறார்
நாயகி பிரார்த்தனா இயல்பான நடிப்பால் கவருகிறார்..
அப்துல் ரபேவின் மகன்களாக மிதுன், ரித்திக், நிதின் ஆகிய குழந்தைகளின் அப்பாவித்தனமான நடிப்பு மனதை கலங்கவும் சிந்திக்கவும் சில நேரம் சிரிக்கவும் வைக்கிறது.
தந்தையின் கண்டிப்பான காட்சிகளில் பிளாக் அண்ட் வொயிட் படமாகவும் சந்தோஷமான காட்சிகளில் கலர்ஃபுல்லாகவும் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் இயக்குனர் அவினாஷ்.
வேத் சங்கரின் இசை ஓகே ரகம்..
தாய் இல்லாமல் வளரும் குழந்தைகள் எப்படி வளரும் என்பதையும் கண்டிப்பான தந்தையுடன் ஒன்ற மறுக்கும் குழந்தைகளையும் அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
Naangal movie review
—-

