முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸ் விமர்சனம்
முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸ் விமர்சனம்
ஸ்டோரி…
முத்து குமார் – சிங்கம்புலி – வடிவேல் முருகன்.. இவர்கள் போலீஸ்.. ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிகின்றனர்.. இங்கு ஒரு புகார் கூட வராத நிலையில் காவல் நிலையத்தை மூட பார்க்கின்றனர்.. போலீசாக இருந்து கொண்டு ஆட்டுப்பண்ணையை கவனித்து வருகிறார் வடிவேல் முருகன்.. ஒருவேளை வேறு ஊருக்கு இடம் மாற்றம் செய்தால் தன்னால் ஆட்டுப்பண்ணையை கவனிக்க முடியாது என்பதால் ஏதாவது ஒரு வழக்கு வரும் என்று காத்திருக்கிறார்..
இந்த சூழ்நிலையில் அந்த காட்டுப் பகுதியில் விஜய்சேதுபதியின் தலை மட்டும் ஒரு இடத்தில் துண்டிக்கப்பட்டு கிடைக்கிறது.. இவரின் காவல் நிலைய எல்லைக்குள் அந்த தலை இல்லை என்றாலும் தலையை எடுத்து இவரின் காவல் நிலைய எல்லைக்குள் வைத்துக்கொண்டு விசாரணையை தொடங்க முயற்சிக்கிறார் வடிவேல்..
தலை மட்டும் இருக்க அவரது உடல் எங்கே.? அவரைக் கொன்றவர் யார்?இவர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் விசாரணையில் இறங்குகிறது காவல்துறை.
விசாரணையில் இறங்கும் போது முத்து என்கிற கட்டானை அவர்கள் தேடிச் சென்றபோது அவர்களுக்கு கிடைத்த தகவல்கள் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
விஜய் சேதுபதி – முத்து (அலியாஸ் காட்டான்)
பாலாஜி சக்திவேல் – மீசை பெருசு
இர்ஷாத் அலி – பென்னி
சுதேவ் நாயர் – ஜானி
அரிஸ்டோ சுரேஷ் – பாபு
சுனிதா சந்திரன்
ஆர். அமரேந்திரன்
சாதனா
ஹீரோவின் துண்டிக்கப்பட்ட தலை.. எந்த ஹீரோவும் ஏற்க மறுக்கும் கேரக்டர் இது.. தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல் இந்த கேரக்டர் செய்த விஜய் சேதுபதியை பாராட்டிய ஆக வேண்டும்..
அதன் பின்னர் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நடிப்பில் அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.. முக்கியமாக அந்த ஹோட்டல் ஓனர் காட்சி.. நடன குழு பெண்கள் காட்சி.. காட்டன் கேரக்டருக்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார்..

அபி நக்ஷத்ரா – சிட்டு
ரிஷா ஜேகப்ஸ் – மீனா
பார்வதி – லலிதா
சிந்து – கலைவாணி.. ஒவ்வொருவரும் அழகிலும் நடிப்பிலும் கவர்கின்றனர்.. தங்கள் பாத்திரத்தில் ஜொலிக்கின்றனர்..
மிலிந்த் சோமன் – சிவேட்டன்.. சாதாரண தோற்றம் என்றாலும் இவரின் கேரக்டர் எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது..
முத்து குமார் – சிதார்த்தன்
சிங்கம்புலி – தங்கமுடி
வடிவேல் முருகன் – காளை பாண்டியன்
வடிவேல் பார்வதியின் காட்சிகள் எதார்த்த தம்பதி ரொமான்ஸ்.. முத்துக்குமார் சிங்கம் புலி தேடுதல் வேட்டை படத்திற்கு பலம்..

டெக்னீசியன்ஸ்…
இயக்குநர் – எம். மணிகண்டன்
இயக்குநர் / எடிட்டர் – பி. அஜித் குமார்
ஒளிப்பதிவு (DOP) – மது என்
ஒளிப்பதிவு (DOP) – என். சண்முகசுந்தரம்
இசை – ராஜேஷ் முருகேசன்
ஒலி – அஜயன் அடாட்
கலை இயக்குநர் – ஜாக்கி
கலை இயக்குநர் – சாபு மோகன்
ஒளிப்பதிவும் இசையும் இந்த இணையதள தொடருக்கு பலம்..
பாடல்வரிகள் – கபிலன் ஷக்கர்
உடை வடிவமைப்பாளர் – ஜே. கவிதா
சண்டை அமைப்பு – சில்வா மாஸ்டர்
தயாரிப்பு – விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்
நிர்வாக தயாரிப்பாளர் – சந்துருசேகரன்
நிர்வாக தயாரிப்பாளர் – வி.ஆர். குமார்
PRO – யுவராஜ்
மணிகண்டன் மற்றும் இந்த படத்தின் எடிட்டர் அஜித்குமார் இருவரும் இணைந்து இயக்கியிருக்கின்றனர்.. ஹீரோவின் தலை இருக்கு.. உடல் எங்கே என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு எபிசோடுகளை நகர்த்திருப்பது சிறப்பு.. அதே சமயம் முத்து கேரக்டர் நல்லவர் என்றால் அவரை யார் கொலை செய்ய வேண்டும் ஏன் கொலை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
Muthu Engira Kaattaan web series review

