மர்மர் விமர்சனம் 3.25/5… மறையாத மர்மங்கள்
மர்மர் விமர்சனம் 3.25/5… மறையாத மர்மங்கள்
Found Footage Film’. அப்படின்னா என்ன?
ஹாலிவுட் படம் Paranormal Activity மாதிரி. படத்துல வர்ற கேரக்டர் அவங்க பாக்குறத அப்படியே வீடியோ ரெகார்ட் பண்ணிகிட்டே நமக்கு கதை சொல்ற மாதிரி படம் இது.
ஸ்டோரி…
திருவண்ணாமலை – ஜவ்வாது மலைப் பகுதி காட்டில் கன்னி தெய்வங்களுக்கு வருடம் தோறும் பூஜை செய்வது வழக்கம்.. ஆனால் அந்த பூஜையை சூனியக்காரியின் ஆவி தடுப்பதாக ஊர் மக்களிடையே அச்சம் ஏற்படுகிறது.. மேலும் அந்த காட்டுப் பகுதியில் எவர் சென்றாலும் அவர்கள் உயிரோடு திரும்பி வந்ததில்லை என நம்பப்படுகிறது..
இதனை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்து கொண்ட YouTubeபர்கள் ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், அரியா செல்வராஜ் ஆகிய நால்வரும் டாக்குமென்ட்ரி எடுத்து followerகளை பயமுறுத்த நினைத்து காட்டுப் பகுதிக்குள் செல்கின்றனர்..
இவர்களுக்கு வழிகாட்ட அதே காட்டு பகுதியில் வசிக்கும் யுவிகா ராஜேந்திரனும் இவர்களுடன் இணைந்து கொள்கிறார்..
அவர்கள் காட்டுப்பகுதிக்கு சென்று அந்த ஆவிகளை சந்தித்தார்களா.? ஆவிகள் இவர்களை உயிரோடு விட்டதா.? என்ன நடந்தது.? அவர்களால் டாக்குமென்ட்ரி எடுக்க முடிந்ததா.? ஊர் மக்கள் நம்பும் அந்த ஆவி உண்மைதானா? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
நடிகர்கள் : ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ்… இவர்கள் அனைவரும் நேர்த்தியான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.. பதட்டம், பயம், கலாட்டா, நட்பு, காதல், மது, புகை என படத்தின் திரைக்கதையை நகர்த்தி இருக்கின்றனர்.. ஆனால் படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம்.. யுவிகாவின் கேரக்டர் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறது..
திகில் திகில் என கதை நகர்த்தி சென்றாலும் இன்னும் கூடுதல் திகிலை கொடுத்திருந்தால் ரசிகர்கள் நிச்சயம் படத்தை கொண்டாடி இருப்பார்கள்.. ஆனால் எப்போது பேய் வரும் எப்படி கொல்லும் என்ற பரபரப்பிலேயே நம்மை சீட் நுனியில் உட்கார வைத்து விடுகிறார் இயக்குனர்.

டெக்னீசியன்ஸ்…
தயாரிப்பு : எஸ்.பி.கே பிக்சர்ஸ் மற்றும் அலோன் பிக்சர்ஸ
இயக்கம் : ஹேம்நாத் நாராயணன்
உலக சினிமாவில் நாம் பார்த்த பல பேய் படங்களில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும்.. ஆனால் இதில் இசையமைப்பாளர் இல்லை.. வெறும் ஓசையை மட்டுமே வைத்து படத்தை நகர்த்தி இருப்பது இயக்குனர் மற்றும் சவுண்ட் இன்ஜினியரின் தன்னம்பிக்கையை காட்டுகிறது.
மேலும் வழக்கமான பேய் படமாக இல்லாமல் FOUND Footage ‛பவுண்ட் பூட்டேஜ்’ எனும் நேரடி கேமராவில் காட்சிகளை படமாக்கி இருக்கின்றனர்..
இதற்காகவே ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்சை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.. யாரோ ஒருவர் எடுத்த வீடியோவை பார்ப்பது போல் அல்லாமல் நாமே ஒரு வீடியோ எடுத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பது போன்ற உணர்வை இந்த மர்மர் கொடுத்திருக்கிறது.. இதில் இசை இல்லாததால் கேவ்ய்ன் பிரெடெரிக் ஒலி வடிவமைப்பு மூலம் நம்மை பயப்பட வைத்து இருக்கின்றனர் படக்குழுவினர்..
இன்றளவும் திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் நம்பப்படும் கன்னி தெய்வங்கள் பற்றிய கதைகளத்தை எடுத்து இருப்பதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசிப்பது நிச்சயம்..
கன்னி தெய்வங்கள் பூஜையை தடுக்கும் சூனியக்காரி கதையை சஸ்பென்ஸ் திரில்லராக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹேம்நாத் நாராயணன்.
Murmur movie review

