மிஸ்டர். ஹவுஸ் கீப்பிங் விமர்சனம்..

மிஸ்டர். ஹவுஸ் கீப்பிங் விமர்சனம்..

 

மிஸ்டர். ஹவுஸ் கீப்பிங் விமர்சனம்..

 

ஸ்டோரி…

கல்லூரி மாணவர் ஹரி பாஸ்கர் நாயகி லாஸ்லியாவை காதலிக்கிறார். ஆனால் லாஸ்லியா காதலை நிராகரித்து விடுகிறார்.

கல்லூரி முடிந்து பிறகும் அரியர் வைத்துக் இருக்கும் ஹரி பாஸ்கர், சந்தர்ப்ப சூழ்நிலையால் லாஸ்லியாவின் இல்லத்தில் 6 மாதங்கள் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்கிறார்.

அப்போது லாஸ்லியா வேறு ஒருவரை காதலிப்பதை தெரிந்து கொள்கிறார்..பின்னர் ஹரி பாஸ்கர், என்ன செய்தார்.? இறுதியில் யாருடைய காதல் வென்றது ? என்பது மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நாயகனாக யூடியுப் பிரபலம் ஹரி பாஸ்கர்.. ஜாலியான இளைஞர் வேடத்தில் உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பால் கவர்கிறார்… நாயகியாக லாஸ்லியா.. அசால்டாக ஸ்கோர் செய்திருக்கிறார்.. ஆனால் முன்பு பார்த்து படங்களை விட இந்தப் படத்தில் ஒல்லியாக இருக்கிறார்..

முக்கிய கதாபாத்திரத்தில் ரயான் அசத்தல்..
சாரா காட்சிகளில் ரசிகர்களின் சிரிப்பொலியை கேட்க முடிகிறது.. இளவரசு, நாயகனின் அம்மா & தங்கையாக அனைவரும் பொருத்தமான தேர்வு.

டெக்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் ஓசோ வெங்கட்டின் இசையில் பாடல்கள் படத்துடன் ஒன்ற வைக்கிறது..

ஒளிப்பதிவாளர் குலோத்துங்க வர்மன் : நாயகன் நாயகன் காதலை கலர்புல்லாக காட்டியிருக்கிறார்.. படத்தொகுப்பாளர் ராம சுபுவின் பணி தொய்வில்லாமல் திரைக்கதையை நகர்த்தி செல்கிறது..

இயக்குனர் – அருண் ரவிச்சந்திரன் : தற்போதைய 2K கிட்ஸ் காதலை ஜாலியாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.. ஆனால், 1980-ஸ் காதலை போல பார்த்து பழகிய பாணியில் சொல்லி இருக்கிறார்..

ஆனால் அதே சமயத்தில் ஒரு பெண் காதலை மறுத்தால் அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதையும் விழிப்புணர்வாக நாயகன் கேரக்டர் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்..

Mr House Keeping movie review