Made in Korea விமர்சனம்.. கொரியாவில் கொண்டாட்டம்

Made in Korea விமர்சனம்.. கொரியாவில் கொண்டாட்டம்

 

Made in Korea விமர்சனம்.. கொரியாவில் கொண்டாட்டம்

 

 

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

ஸ்டோரி…

தமிழ்நாட்டில் வசிக்கும் பிரியங்காவுக்கு கொரியாவுக்கு செல்ல வேண்டும் என்பது சிறு வயது முதலே உள்ள ஆசை.. அதற்குப் பெற்றோரும் கணவனும் சம்மதிக்காத நிலையில் ஒரு கட்டத்தில் பிரியங்கா தனியாக கொரியா செல்கிறார்..

அங்கு சென்ற பின் அவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன.? வாழ்க்கையில் உயர்ந்தாரா.? அல்லது கொரியா கொடுமைகளை கொடுத்ததா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

பிரியங்கா மோகன், பார்க் ஹை-ஜின்

பல படங்களில் வழக்கமான நாயகியாக வந்து டூயட் பாடி சென்ற பிரியங்கா இதில் கதை நாயகியாக பிரகாசிக்கிறார்..

எவரின் துணை இல்லை என்றாலும் தன்னம்பிக்கை இருந்தால் தனியாக வாழ்ந்து காட்ட முடியும் என்ற உணர்வை இவரது கேரக்டர் கொடுத்திருப்பது சிறப்பு..

இவருடன் நடித்த கொரியா நடிகர்களும் நல்ல தேர்வு..

டெக்னீசியன்ஸ்…

எழுத்து, இயக்கம்: ரா.கார்த்திக்,
தயாரிப்பாளர்: ஸ்ரீநிதி சாகர்,
தயாரிப்பு: ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்

மைனஸ்…

ஊட்டியில் பிரபல கான்வென்ட் பள்ளியில் படிக்கிறார் பிரியங்கா.. ஆனால் கொரியாவுக்கு சென்றது அவர் பேசும் இங்கிலீஷ் அந்த மொழி பற்றி தெரியாதவர் பேசுவது போல தான் உள்ளது..

பிரியங்காவுக்கு 3 வயது இருக்கும் போது அப்பா எப்படி இருந்தாரோ பிரியங்காவுக்கு 23 வயதானாலும் அப்பா அப்படிதான் இருக்கிறார் அவரது தோற்றத்தில் ஆவது கொஞ்சம் மாறுதல் காட்டி இருக்கலாமே.?

ஒரு படத்தின் வெற்றிக்கு கதை மட்டுமல்ல கேரக்டர் தேர்வு முக்கியம்.. ஆனால் இதற்குப் பிரியங்கா பொருத்தமாக இல்லை என்பதே உண்மை.. அவரது முக பாவனைகள் செயற்கைத்தனமே.. கொரியா பெண்மணி ஹோட்டல் திறக்கும்போது காட்டும் மகிழ்ச்சியானமுக பாவனைகள் கூட பிரியங்கா முகத்தில் இல்லை ஏனோ.?

பெரும்பாலும் வெளியூருக்கு தனியாக செல்லும் சில பெண்களுக்கு கொரியாவில் கொடுமைகள் நடப்பது போல சித்தரிக்கப்படும்.. இதில் கொரியாவில் தமிழ் பெண் கொண்டாட்டமான வாழ்க்கை வாழ்வதை சொல்லியிருக்கிறார் இயக்குனர்..

ஒரு காட்சியை படமாக்கும் போது அந்த காட்சிக்குள் நாம் சென்று வந்த உணர்வை ஏற்படுத்த வேண்டும்.. அப்படி ஒரு உணர்வை.. விசா இல்லாமல் கொரியாவுக்கு சென்று வந்த உணர்வை கொண்டு வந்திருக்கிறார் .

பாடல்களும் இசையும் படத்துடன் ஒன்றி இருக்கிறது.. முக்கியமாக கொரியா மொழி பாடல்களும் நம்மை ஈர்க்கிறது..

என்னதான் மகளை செல்லமாக வளர்த்தாலும் மகளின் உணர்வுகளை சில பெற்றோர்கள் உணர்வதில்லை.. மதிப்பதில்லை.. அதுபோலதான் பிரியங்காவின் சுதந்திர உணர்வை யாரும் புரிந்து கொள்ளவில்லை..

ஒரு கட்டத்தில் தந்தையை மீறி கணவனை மீறி கொரியாவுக்கு செல்லும் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் அவள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு எப்படி என்பதை பிரியங்கா கேரக்டர் மூலம் உணர வைத்திருக்கிறார் இயக்குனர்..

தமிழ்நாட்டில் வெளியூருக்கே தனியாக செல்லும் அச்சப்படும் பெண்கள் மத்தியில் வெளிநாட்டுக்கு தனியாக செல்லும் பிரியங்கா பல பெண்களுக்கு முன் உதாரணமாக அமைவார்..

 

Made in Korea movie review