மாயன் விமர்சனம்
மாயன் விமர்சனம்
இந்தியப் புராணங்களை ஆராயும் ஒரு புராண த்ரில்லர் திரைப்படம் இது.. ஜி. ராஜஸ் கண்ணா என்பவர் இயக்கியுள்ளார்..
ஸ்டோரி…
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஆதி (வினோத் மோகனுக்கு) ஒரு மின்னஞ்சல் வருகிறது.. அதில் 13 நாட்களில் உலகம் அழியப் போகிறது.. நீ வாழ நினைத்த தருணங்களை இப்போதே வாழ்ந்துகொள.. சந்தோஷங்களை அனுபவித்துக் கொள்.” என்ற வாசகம் அதில் இடம்பெறுகிறது.. அது போல வாட்ஸ் அப்பிலும் இவருக்கு இந்த தகவல் வருகிறது..
இதனை எடுத்து அந்த 13 நாட்களில் அவர் என்ன செய்தார்? இவருக்கு இந்த தகவல் வர என்ன காரணம்? இவருக்கும் புராண காலத்திற்கும் என்ன தொடர்பு? இந்த சம்பவத்தில் மாயன் காலண்டருக்கு என்ன தொடர்பு என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்..
இதில் வினோத் மோகன், பிந்து மாதவி, விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜா சிம்மன், ஸ்ரீரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார், பியா பஜ்பாய் நடித்துள்ளனர்.
வினோத் மோகன் படம் முழுக்க இறுக்கமான முகத்துடனே காணப்படுகிறார். முகம் முழுவதும் தாடி இருப்பதால் அவரின் முக பாவனைகள் கூட சரிவர தெரியவில்லை.. ஆனால் நல்ல உடல் கட்டு நல்ல உயரம் என கட்டுக்கோப்பாக ஒரு நல்ல ஹீரோ மெட்டீரியலாக இருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிந்து மாதவி கண்களில் காதல் மொழி பேசி கவர்கிறார்..
கோப்பெருந்தேவியாக வரும் பிந்து மாதவி, வீரசூரனாக வரும் சாய் தீனா, சக்ரவர்த்தியாக ஜான் விஜய் மற்ற கேரக்டர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்..
டெக்னீசியன்ஸ்..
இப்படத்தை ஜி. ராஜஸ் கண்ணா மற்றும் டாடோ கனேஷ் மோகனா சுந்தரம் தயாரித்துள்ளனர். படம் ஒளிப்பதிவாளர் கே. அருண் பிரசாத், இசை இயக்குநர் எம். எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட், மற்றும் எடிட்டர் எம். ஆர். ரெஜீஷ்.
பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட். அருண் பிரசாந்த்தின் ஒளிப்பதிவு அருமை..
மாயன் காலண்டர் புராண கதையை இந்த கால கதையுடன் கனெக்ட் செய்து படத்தை இயக்கியிருக்கிறார் ராஜேஷ் கண்ணா.. ஆனால் அதை சொன்ன விதத்திலும் கேரக்டர்கள் தேர்வு செய்த விதத்திலும் கோட்டை விட்டு இருக்கிறார்..
சிவன் பிரம்மன் விஷ்ணு ஆகியோரது கதைகள் சொல்லப்பட்டாலும் சிவனை அழிக்கும் கடவுளாக காட்டி ரசிகர்களை குழப்பம் அடைய செய்து இருக்கிறார்..
Maayan movie review


