லக்கி பாஸ்கர் விமர்சனம் 4/5.. பேங்க் பிராடு
லக்கி பாஸ்கர் விமர்சனம் 4/5.. பேங்க் பிராடு
ஸ்டோரி…
1992 கதைக்களம் நடக்கிறது.. பம்பாயில் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார் துல்கர் சல்மான்.. இவரது மனைவி மீனாட்சி.. இவர்களது மகன் ரித்விக்.
தன் தம்பி தங்கை மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார் துல்கர்.. நேர்மையாக பணிபுரிந்தாலும் வங்கியில் இவருக்கு ப்ரமோஷன் பாதிக்கப்படுகிறது.. எனவே குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கிறார் துல்கர்.
அதன்படி பேங்கில் பணத்தை கையாடல் செய்து பல வழிகளில் ரொட்டேஷன் செய்து இலட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்..
இதனால் இவரது குடும்பத்தின் பொருளாதாரம் உயர்கிறது.. மனைவி ஆசைப்பட்டபடி அவருக்கு ஒரு கடையும் வைத்து தருகிறார்… மற்றும் தம்பி தங்கைகளுக்கும் நல்ல முறையில் வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இவர் வங்கி பணத்தை கையாடல் செய்தது உயர் அதிகாரிகளுக்கு தெரிய வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது? அது வழக்கிலிருந்து தப்பிக்க என்ன செய்தார் துல்கர் சல்மான்.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற நேரடி தமிழ் படத்தில் கலக்கிய துல்கர் சல்மான் அதே பட சாயலில் கொஞ்சம் வித்தியாசமாக குடும்ப செண்டிமெண்ட் உடன் தன்னுடைய எதார்த்த நடிப்பின் மூலம் லக்கி பாஸ்கரை சூப்பர் பாஸ்கராக உயர வைத்திருக்கிறார்..
படத்தில் எந்த ஆக்ஷன் காட்சிகளும் இல்லை.. ஆனாலும் படத்தை அழகாகவே திரில்லர் கலந்த குடும்ப செண்டிமெண்ட் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் வெங்கி..
நடுத்தர குடும்பத்தினர் பணத்திற்கு ஆசைப்பட்டாலும் ஒரு கட்டத்தில் பணமே அந்த குடும்பத்தின் நிம்மதியை குலைக்கும் வகையில் காட்சிகளை அமைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டி இருக்கிறது.. அதற்கு ஏற்ப அழகான நடிப்பை தன் மனைவி கேரக்டர் மூலம் உயர வைத்திருக்கிறார் மீனாட்சி சவுத்ரி.
டெக்னீசியன்ஸ்..
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் நிமிஷ் ரவியின் அழகான ஒளிப்பதிவும் ரசிகர்களை படத்துடன் ஒன்ற வைக்கிறது.
முக்கியமாக ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய இரு படங்களும் ஜிவி பிரகாஷ் இசையில் உயர்ந்து நிற்கிறது என்று சொல்லலாம்
1990களின் பம்பாயை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் கலை இயக்குனர்..
1990-களில் இந்திய நாட்டையே பரபரப்பாகிய ஹவாலா மோசடி & ஹர்ஷத் மேக்தா ஊழல் காட்சிகளை இந்த கால இளைஞர்களுக்கு தெரியும் வகையில் அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இந்த ‘வாத்தி’ இயக்குனர் வெங்கி அட்லூரி..
ஷேர் மார்க்கெட் மூலம் கோடிகளை விழுங்கிய மோசடியை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
கோடிக்கணக்கான இந்த ஊழலுக்கு வங்கி அதிகாரிகளின் துணை இல்லாமல் இருக்குமா? அதையும் அப்பட்டமாக காட்டி உயர் அதிகாரிகளின் முகமூடியை கிழித்து எறிந்து இருக்கிறார் இயக்குனர் வெங்கி..
ஆக லக்கி பாஸ்கர்.. பேங்க் பிராடு..
Lucky Baskhar movie review

