லாரா விமர்சனம்.. 3.5/5.. காரைக்கால் நி(க)லவரம்
லாரா விமர்சனம்.. 3.5/5.. காரைக்கால் நி(க)லவரம்
உண்மைச் சம்பவத்தை காரைக்கால் பகுதியில் கதைக்களமாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் மணி மூர்த்தி.
ஸ்டோரி….
காரைக்கால் பகுதியில் உள்ள நிரவி காவல் நிலையத்திற்கு ஒரு தகவல் வருகிறது.
ஒரு பெண்ணின் சடலம் சிதைக்கப்பட்ட முகத்துடன் அடையாளம் தெரியாமல் கடற்கரையில் ஒதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது..
இந்த சூழ்நிலையில் லாரன்ஸ் என்பவன் தனது மனைவி ஸ்டெல்லாவைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறான்.. அவன் மனைவியின் உடலும் அந்த இறந்த பெண்ணின் உடலும் ஒரே மாதிரி இருக்கும் சூழ்நிலையில் போலீஸ் தீவிரமாக விசாரிக்க ஆனால் தன் மனைவி இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்கிறான்.
அப்படி என்றால் இறந்த பெண் யார்? லாரன்ஸ் மனைவி என்ன ஆனார்? என்பதெல்லாம் படத்தின் மீதிக்கதை
இப்படியாக சிறுகதையாக காணப்பட்டாலும் இதனிடையில் பல கிளைக் கதைகளை சொருகி இருக்கிறார் இயக்குனர்..
ஹவாலா பணம் மோசடி, பாலியல் தொழில் பெண்கள்.. அசோக் & லாராவின் காதல் கதை.. ஆதரவற்றோர் இல்லம்.. அரசியல்வாதி போர்வையில் மர்ம முடிச்சுகள்.. அந்தக் காதல் கதைக்கும் இந்த கொலைக்கும் என்ன தொடர்பு.. ? என்பதுடன் படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்..

கேரக்டர்ஸ்…
அசோக் குமார், கார்த்திகேசன், அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, பாலா,எஸ். கே. பாபு, திலீப்குமார், இ.எஸ். பிரதீப் நடித்துள்ளனர்.
‘லாரா’ போஸ்டரில் அசோக் இருந்தாரே.? அவரை இடைவேளை வரையும் தேடினாலும் கிடைக்காதவர் இடைவேளைக்குப் பிறகே வருகிறார்.. கொஞ்சம் காட்சிகள் என்றாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் அசோக்.. எம்.எல்.ஏ. மகன் என்றாலும் பொறுப்பான பையனாக பாசமான காதலனாக கவர்கிறார்.
தயாரிப்பாளர் கார்த்திகேசன் விசாரணை இன்ஸ்பெக்டராக வருகிறார்.. சினிமா போலீஸ் போல் இல்லாமல் எதார்த்த போலீசாக தன் கேரக்டர் மூலம் கவர்ந்திருக்கிறார்.. லாராவாக அனுஷ்ரேயா ராஜன் வருகிறார். ஆதரவற்ற இல்ல மூலம் அனுதாபங்களை அள்ளுகிறார்.
ஸ்டெல்லாவாக வெண்மதி, ஜெயாவாக வர்ஷினி இருவருமே தங்கள் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர்.. விபச்சாரியாக நடித்துள்ள ஜெயாவின் நடிப்பு சிறப்பு.. குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழில் ஈடுபடுவதும் பின்னர் கணவனிடம் அடி வாங்கும் என அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்..
பரூக் யாசின் என்ற MLA பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் மேத்யூ வர்கீஸ்.. இவர் காரைக்கால் பகுதியில் வாழ்ந்த ஒரு அரசியல்வாதியை நினைவுபடுத்துகிறார்.
டெக்னீசியன்ஸ்…
மணி மூர்த்தி இயக்க.. ஒளிப்பதிவு செய்துள்ளார் ஆர் ஜே ரவீன்.. இசையை ரகு ஸ்ரவன் குமார் அமைக்க கார்த்திகேசன் என்பவர் தயாரித்துள்ளார்.
காரைக்கால் பகுதியில் கதை.. காரைக்கால் சாலைகள்.. அரசு மருத்துவமனை.. கடற்கரை என அனைத்தையும் அழகாக ஒலிப்பதிவு செய்து இருக்கிறார் ஆர் ஜே ரவீன். இசையை ரகு ஸ்ரவண் குமார் கொடுத்திருக்கிறார்.. பின்னணி இசையில் இன்னும் மெனக்கடல் தேவை.
காரைக்கால் இந்துக்கள் & இஸ்லாமியர் என சம அளவில் உள்ளனர். அதனையும் மையப்படுத்தி காட்சிகள் வைத்து இருக்கிறார் டைரக்டர்..
நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாக இல்லை.. போலீஸ் கிட்ட கூட 100 ரூபாய் கடன் கேட்கும் அந்த அம்மா கேரக்டர் ரசிக்க வைக்கிறது.. குற்றவாளியை பிடிக்கும் முக்கியமான நேரத்தில் எனக்கு கீர் வண்டி ஓட்ட தெரியாது என்ற போலீஸ்காரர் சிரிப்பை வர வைக்கிறார்..
ஆக லாரா… காரைக்கால் நி(க)லவரம்
Lara movie review

