குமார சம்பவம் விமர்சனம்.. குன்(ற்)றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

குமார சம்பவம் விமர்சனம்.. குன்(ற்)றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

 

குமார சம்பவம் விமர்சனம்.. குன்(ற்)றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

 

ஸ்டோரி…

பல டிவி சீரியல்களில் பார்த்த நாயகன் குமரன் தான் இந்த படத்தின் கதாநாயகன்.. இவர் இயக்குனராக வேண்டும் என பல தயாரிப்பாளர்களை தேடி அலைகிறார்.. ஆனாலும் வாய்ப்பு கிட்டவில்லை.. எனவே ஒரு கட்டத்தில் தனது சொந்த பூர்வீக வீட்டை விற்று அதில் வரும் பணத்தை வைத்து படத்தை தயாரிக்கலாம் என எண்ணுகிறார்…

அதன்படி விற்க முயற்சிக்கும்போது அந்த வீட்டில் முதல் மாடியில் வசிக்கும் குமரவேல் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்… இதனால் போலீஸ் தீவிர விசாரணை இறங்குகிறது… அதன்படி குமரனையும் விசாரிக்கிறது… அதன் பிறகு என்ன நடந்தது.? குமரன் நினைத்தபடி இயக்குனர் ஆனாரா? குமரவேல் இறப்புக்கு யார் காரணம்.? என்பதெல்லாம் ‘குமார சம்பவம்’.

கேரக்டர்ஸ்…

குமரன் தங்கராஜன், பாயல், குமாரவேல், ஜி.எம்.குமார், பாலசரவணன், வினோத் சாகர்

குமரன் & பாலசரவணனுடன் இணைந்து செய்த லுாட்டிகள் சிறப்பு.. வில்லன்களை தேடிப்போகும் சம்பவம் வேற லெவல் ரகம்..

நாயகனாக அறிமுகமான குமரனுக்கு இந்த குமார சம்பவம் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் தான்..

தாத்தா ஜி எம் குமார் நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றி இந்த குமார சம்பவத்திற்கு பெரிய பில்லராக இருக்கிறார்.

சமூக நலனுக்காக போராடும் சமூக ஆர்வலராக குமரவேல்.. இதனால் இவர் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்..

சிபிஐ ஆபிஸராக வினோத் சாகர் கலக்கி இருக்கிறார்.. அவரது நடிப்பு இந்த படத்திற்கு பெரிய பலம்..

நாயகி பாயலுக்கு படத்தில் அதிக பாய்ச்சல் இல்லை.. இவர்களுடன் சிவா அரவிந்த், வினோத் முன்னா ஆகியோரின் பங்களிப்பும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…

இசை : அச்சுராஜாமணி
ஒளிப்பதிவு : ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி
படத்தொகுப்பு : மதன்
தயாரிப்பு : கே.ஜே.கணேஷ்
இயக்கம் : பாலாஜி வேணுகோபால்

அச்சு ராஜாமணியின் இசையும் ஜெகதீஷ் சுந்தரமுர்த்தியின் ஒளிப்பதிவும் சம்பவத்திற்கு கை கொடுத்துள்ளது..

போலீஸ் விசாரணை வளையத்துக்குள் பல ஃப்ளாஷ்பேக் கதைகளை சொல்லி இந்த குமார சம்பவத்தை கலகலப்பு சம்பவம் ஆக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி.. சீரியல் நாயகனை சீரியஸ் நாயகனாகவே காட்டியிருக்கிறார்..

குமரவேல் மரண சம்பவம் மற்றும் அந்த கிளைமாக்ஸ் காட்சி வித்தியாசமான சுவாரசியமான கற்பனை..

Kumara Sambavam movie review