குபேரா விமர்சனம்.. 4/5.. பினாமியான பிச்சைக்காரன்

குபேரா விமர்சனம்.. 4/5.. பினாமியான பிச்சைக்காரன்

குபேரா விமர்சனம்.. 4/5.. பினாமியான பிச்சைக்காரன்

 

ஒரு பிச்சைக்காரன் பல கோடிகளுக்கு பினாமி ஆன கதை என்பதுதான் ஒன்லைன்..

ஸ்டோரி…

இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் இருப்பதை அறிகிறார் தொழில் அதிபர் நீரஜ் (ஜிம் சர்ப்).. எனவே இதை வைத்து பெரியளவில் பிசினஸ் செய்ய திட்டமிட்டு அரசு அதிகாரிகளை வளைக்க முயற்சிக்கிறார்.. அதற்கு நாகர்ஜுனாவை நியமிக்கிறார்..

அரசு அதிகாரிகளுக்கு பணத்தை கருப்பாகவும் வெள்ளையாகவும் கொடுக்க பினாமிகளை வைத்து திட்டமிடுகின்றனர்.. இதற்காக இந்தியாவில் முக்கிய நகரங்களில் உள்ள சில பிச்சைக்காரர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.. அதில் தனுஷும் ஒரு பிச்சைக்காரர்..

இந்தப் பிச்சைக்காரர்களை மும்பைக்கு வரவைத்து இவர்களின் திட்டத்தை செயல்படுத்த நினைக்கின்றனர்.. இதனால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் பிச்சைக்காரர் தனுஷ். அதன் பிறகு என்ன நடந்தது..? அவர் பணத்தைப் அபகரித்துக் கொண்டாரா அல்லது இவர்களிடம் சிக்கிக் கொண்டாரா.? ராஷ்மிகாவின் தனுஷுக்கும் என்ன தொடர்பு என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

இது போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்கும் தனுஷுக்கு முதலில் ஒரு பாராட்டு பூங்கொத்து.. அசல் பிச்சைக்காரனாகவே தன்னை உருமாற்றிக் கொண்டு அசத்தியிருக்கிறார்.. அதன் பின்னர் படிப்படியாக தன்னை கொஞ்சம் பணக்காரனாக மாற்றிக் கொள்ளும் கேரக்டரில் உடல் மொழியில் உச்சத்தை தொட்டிருக்கிறார்..

ஹீரோவுடன் டூயட் பாடும் ஹீரோயின் என்றில்லாமல் கொடுத்த கேரக்டரில் ராஷ்மிகா ராக்கிங் மெகா-வாக மாறி இருக்கிறார்..

நேர்மையாக வாழ்வது பின்னர் பணத்தாசையால் கொஞ்சம் கொஞ்சமாக மனம் தடுமாறுவது என தன் கேரக்டரை நகர்த்தியிருக்கிறார் நாகார்ஜுனா..

நாசர் பாக்யராஜ் பகவதி பெருமாள் சுனைனா என நமக்கு தெரிந்த தமிழ் முகங்கள் படத்தில் நடித்திருந்தாலும் தெலுங்கு வாசனையை நுகராமல் இருக்க முடியவில்லை..

ஜிம் சர்ப் மற்றும் சௌரவ் குரானா இருவரும் வில்லன் நடிப்பில் அசத்தல்..

டெக்னீசியன்ஸ்…

நிக்கெட் பொம்மி என்பவர் ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் இருவரும் தங்கள் பணிகளில் கச்சிதம்.. அழகான படத்தொகுப்பை கொடுத்துள்ளார் எடிட்டர்.. போய் வா நண்பா என்ற தனுஷ் பாடிய பாடல் ரசிகர்களை தியேட்டரில் ஆட்டம் போட வைக்கும்..

தெலுங்கில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேகர் கம்முலா.. இவர் தேசிய விருதுகளையும் வென்று இருக்கிறார்.. எனவே இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது.. அதனை நிறைவேற்றும் வகையில் சிறப்பான திரைக்கதை எழுதி அதில் சிறந்த நடிகர் தனுஷை பொருத்தி வெற்றிக்களம் கண்டிருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா..

3 மணி நேரம் என நீளமான இந்த படத்தில் காட்சிகளை ட்ரிம் செய்திருக்கலாம்.. அல்லது வேகத்தை கூட்டி இருக்கலாம்.. வேகமும் குறைந்து நீளமும் அதிகரித்திருப்பதால் அயற்சி வரலாம்..

தனுஷின் அம்மா சென்டிமென்ட் ராஷ்மிகாவின் ஃப்ளாஷ் பேக் உள்ளிட்டவைகளில் இன்னும் உணர்வுப்பூர்வமான அழுத்தம் கொடுத்திருக்கலாம்..

ஒரு பிச்சைக்காரன் பினாமியான கதையில் சிறந்த நடிகர் தனுஷை பொருத்தி வெற்றிக்களம் கண்டுள்ளார் இயக்குனர் சேகர் கம்முலா..

Kuberaa movie review