கொம்பு சீவி விமர்சனம்… ஆக்க்ஷன் அமர்க்களம்.. ஆனால் மீதி..?

கொம்பு சீவி விமர்சனம்… ஆக்க்ஷன் அமர்க்களம்.. ஆனால் மீதி..?

 

கொம்பு சீவி விமர்சனம்… ஆக்க்ஷன் அமர்க்களம்.. ஆனால் மீதி..?

 

ஸ்டோரி…

கட்டப் பஞ்சாயத்து செய்து ஊரில் கெத்தாக வாழ்ந்து வருபவர் சரத்குமார்.. ஒரு கட்டத்தில் பெற்றோரை இழந்து அனாதையாக தவிக்கும் சண்முக பாண்டியனை தத்தெடுத்து வளத்து வருகிறார்..

உனக்கு என்ன ஆசை என்று கேட்கிறார் சரத்குமார்.. அதற்கு நாயகனோ வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதித்து அதையே மெத்தையாக உருவாக்கி அதில் படுத்து உறங்க வேண்டும் என்கிறார்..

அதன் படி இருவரும் உழைக்க ஆரம்பிக்கின்றனர்.. ஆனால் இவர்கள் நேர்மையான வழியில் உழைக்காமல் கஞ்சா விற்று பெரிதாக சம்பாதிக்க நினைக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் அந்த ஊருக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் நாயகி தர்ணிகா.. நாயகி மீது காதல் கொள்கிறார் நாயகன் சண்முக பாண்டியன்… இதனை வைத்து ஒரு திட்டம் போடுகிறார் நாயகி..

கஞ்சா கடத்தல் வழக்கில் நாயகனை சிக்க வைத்து சிறையில் அடைக்கிறார் நாயகி..

அதன் பிறகு என்ன நடந்தது.? நாயகனை சரத்குமார் மீட்டாரா.? காதல் என்ன ஆனது.? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Shanmugapandian – Pandi
Sarath Kumar – Rokkapuli
Tharnika- Inspector Laila
Sujith Shankar – SP karan
Munishkanth – Padaiyappa
Kalki raja – Kunthu
Kali venkat – Constable
George maryam- Constable
Prabakar – Konda Reddy
Ramachandran – Broker panbalan
Indhumathy – Rokkapuli wife

படைத்தலைவன் படத்தில் படு சீரியஸாக நடித்திருந்து சண்முக பாண்டியன் இந்த கொம்பு சீவி படத்தில் ஆக்ஷன் கலந்து காமெடி செய்திருக்கிறார்.. ஆனால் ஆக்ஷன் அளவுக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை..

சரத்குமார் காமெடிக்கு முயற்சித்து சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.. பல இடங்களில் வெறுப்பேத்துகிறார்.. இவருக்கு வயதான கேட்ட பக்கா பொருத்தம்..

படையப்பா என்ற முனிஷ்காந்த் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.. இவர் கூடவே கல்கியும் இணைந்து இருக்கிறார்.. ஆனால் மொக்க காமெடி..

நாட்டாமை படத்தில் டீச்சராக கலக்கிய ராணியின் மகள் தர்ணிகா இதில் நாயகி.. காக்கி உடையிலும் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறார்.. புடவையிலும் கவர்கிறார்..

மலையாள நடிகர் சுஜித் சங்கர் கம்பீரமான போலீசாக மிரட்டி இருக்கிறார்.. கான்ஸ்டபிள் காளி வெங்கட் நிறைவான நடிப்பு.. கான்ஸ்டபிள் மரியம் ஜார்ஜ்க்கு போதுமான காட்சி இல்லை..

டெக்னீசியன்ஸ்…

Director: Ponram
Produced By : Mukesh T Chelliah
Music : Yuvan Shankar Raja
Editor : Dinesh Ponraj
DOP : Balasubramaniem
Action: Phoenix Prabhu, Sakathi Saravanan
Art: Saravana Abiram
Choreographer: Sherif, Azhar, Kavya.G
Lyrics: Yuga Bhaarathi, Pa Vijay, Snekhan
PRO : Nikil Murukan
Marketing & Promotion :- K V Mothi (Dec)

படத்தின் முக்கியமாக பேசப்படும் விஷயங்களில் 3.. பின்னணி இசை மற்றொன்று ஆக்சன்.. அடுத்து ஒளிப்பதிவு.. யுவன் சங்கர் ராஜா கலக்கியிருக்கிறார்.. ஆனால் யுவன் இசை இருந்தும் இளையராஜா குரல் இருந்தும் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை..

சரத்குமார் சண்முக பாண்டியன் இருவரின் ஆக்ஷனில் அனல் பறக்கிறது.. Action: Phoenix Prabhu, Sakathi Saravanan..

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவில் அனைத்தும் அருமை..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் & ரஜினி முருகன் உள்ளிட்ட கிராமத்து படங்களில் கலக்கிய இயக்குனர் பொன்ராம் இதில் ஒரு காட்சியில் வருகிறார்.. அந்தப் பட சாயலை போலவே இந்த படத்தையும் கொடுக்க முயற்சித்து தோல்வியுற்று இருக்கிறார்..

டிவியில் பார்த்து சலித்துப்போன சிரிச்சா போச்சு.. முறைச்சா போச்சு என்ற நம்மை வெறுப்பேத்திருக்கிறார்..

அதிலும் முக்கியமாக தமிழ் வார்த்தைகளில் லூ சேர்த்தால் அது தெலுங்கு என்ற காமெடி புளித்துப் போய்விட்டது.. பூ காட்டி அதற்கு தெலுங்கில் என்ன வார்த்தை என்பது கேட்பதெல்லாம் ஓவர்..

 

Kombu Seevi movie review