Youth யூத் விமர்சனம் 4.25/5.. Youthful.. Colorful.. Meaningful
Youth யூத் விமர்சனம் 4.25/5.. Youthful.. Colorful.. Meaningful
கதை…
கென் – அனிஷ்மா – மீனாட்சி – பிரியாண்ஸி இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவர்கள்… இதில் கென் மற்றும் அனிஷ்மா இருவரும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள்..
பக்கத்து வகுப்பில் படிக்கும் மீனாட்சியை காதலிக்கிறார் கென்.. தன் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒரு வாரம் லீவு போட்டு ஊருக்கு செல்கிறார் மீனாட்சி.. அந்த சூழ்நிலையில் சோனல் என்ற மற்றொரு மாணவி கென்னை காதலிப்பதாக கூறுகிறார்.. அந்த ஒரு வாரத்திற்குள் ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகிறது.. இருவரும் நட்பாக பழகுகிறார்கள்.
ஒரு வாரம் கழித்து மீனாட்சி வரும்பொழுது இருவரின் நட்பை பார்த்து டென்ஷன் ஆகிகிறார்.. அதன் பிறகு என்ன ஆனது..? காதல் கை கூடியதா.? மீனாட்சி என்ன செய்தார்.? இதில் அனிஷ்மாவின் பங்கு என்ன என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…
Hero – Ken Karunas
Heroin – Anishma Anilkumar, Meenakshi Dinesh, Priyanshi Yadav
Devadarshini
Suraj Venjanamodu

அனிஷ்மா – மீனாட்சி – பிரியாண்ஸி மூன்று அழகான பள்ளி மாணவிகள் போன்ற ஹீரோயின்ஸ்.. நடிப்பிலும் காதலிலும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.. இளம் ரசிகர்களின் மனதை வெல்லும் மாய கன்னிகள்..
மலையாள நடிகர் சுராஜ்.. நடிப்பில் மலைக்க வைக்கிறார்.. குடித்துவிட்டு பேசினாலும் குடிக்காமல் பேசினாலும் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்.. அம்மாவாக தேவதர்ஷினி.. யூத் படத்தில் இவரும் சிக்ஸர் அடித்திருக்கிறார்..
பிரின்ஸ்பால் நளினி பேசும் வசனம்.. “நீங்க உங்க பிள்ளைங்கள ஸ்கூல்ல விட்டுட்டு போறீங்க.. நீங்க திட்டலாம் நாங்க திட்ட கூடாதா என்று அவர் கேட்கும் கேள்வி பெற்றோர்களுக்கு ஆசிரியரின் பாடம்..
நாயகன் கென் அவர்களின் நண்பர்களாக வரும் பாய்ஸ் கலக்கல் ரகம்.. ஆனால் சிலர் ஓவர் ஆக்டிங்கை குறைத்து இருக்கலாம்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…
Production Company – Paarvathaa Entertainment
Producer – Karuppaiya C Ram, Sulochana Kumar
Cinematographer – Viki
Editor – Nash
Music – G V Prakash
Art Director – Ramu Thangaraj
Costume Designer – Kavya Sriram
Director – Ken Karunas
மியூசிக் டைரக்டர் ஜிவி பிரகாஷ்.. படம் ரிலீசுக்கு முன்பே ஒட்டுமொத்த ஆல்பத்தையும் ஹிட்டாக்கி படத்தின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தவர்.. ஒவ்வொரு பாடலும் ரசித்து தாளம் போட்டு ஆட்டம் போடும் ரகம்..
முட்ட கலக்கி & வா வெள்ளி நிலவே பாடல் ரசிகர்களின் என்றும் ஃபேவரைட் சாங்..
ஒளிப்பதிவாகட்டும் கலை இயக்குனர் பணியாகட்டும் எடிட்டர் பணியாகட்டும் ஒவ்வொருவரும் படத்திற்கு தங்களின் 100% உழைப்பை கொடுத்திருக்கின்றனர்.
இயக்குனராக முதல் படம்.. நாயகனாக முதல் படம் இரண்டிலும் கென் கருணாஸ் டபுள் செஞ்சுரி அடித்திருக்கிறார்.. இரண்டரை மணி நேர படத்தில் இரண்டு மணி நேரம் சிரிக்க வைத்துவிட்டு கடைசி அரை மணி நேரத்தில் கண்கலங்க வைத்து விட்டார்..
பள்ளிப்பருவத்தில் பெண்கள் பின்னால் சுற்றும் பையன் என்று சாதாரண கதைகளமாக இருந்தாலும் எதிர்பாராத இன்டெர்வல் கொடுத்து அதிர்ச்சியான கிளைமாக்ஸ் கொடுத்து கென் நீ கெத்து என்று நிரூபித்து விட்டார்..

தந்தை கண்டிப்பு.. அம்மா பாசம்.. நண்பர்கள் காதல் தோழர்கள் தோழிகள் என அனைத்தையும் கலந்தடித்து நம்மை அந்த பருவத்திற்கே அழைத்துச் சென்றிருக்கிறார் கென்..
அம்மா அன்பின் ஆழத்தையும்.. தந்தை கண்டிப்பின் கண்ணியத்தையும் இவ்வளவு மெச்சூரிட்டியாக 24 வயதில் சொல்லி விட முடியாது.. சபாஷ் கென்..
ஒவ்வொரு காட்சியிலும் குறைந்தபட்சம் 50 பேர் வரை இருப்பார்கள்.. இத்தனை பேரையும் வேலை வாங்குவது கடினமான ஒன்று அழகாக எளிதாக செய்திருக்கிறார்..
தனக்கான யூத் ஃபுல் கதையில் பிரவீன் கேரக்டரில் பிரகாசமாக ஜொலிக்கிறார் கென்..
துள்ளுவதோ இளமை போன்ற (பலான) பள்ளி கதையை சொல்லாமல் காதல் பாடம் நடத்தி முழு மதிப்பெண் எடுத்திருக்கிறார் நாயகனும் இயக்குனருமான கென்..
Ken Youth movie review

