‘கருப்பு’ ட்ரைலர் அப்டேட்.. மீண்டும் சூர்யாவுடன் வெற்றி கூட்டணி அமைத்த சக்திவேலன்
‘கருப்பு’ ட்ரைலர் அப்டேட்.. மீண்டும் சூர்யாவுடன் வெற்றி கூட்டணி அமைத்த சக்திவேலன்
ஒரு வழியாக தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை முடிந்து தற்போது விஜய் முதல்வராகிவிட்டார்.
இதுநாள் வரை தேர்தல் பரபரப்பிலேயே தமிழகம் இருந்ததால் எந்த புதிய படங்களும் பெரிய அளவில் வெளியாகவில்லை.. தற்போது கோலிவுட் தன் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது.
அதன்படி வருகிற மே 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் வெளியாக உள்ளது.
ஆர் ஜே பி என்ற ஆர்ஜே பாலாஜி இயக்கிய இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்..
மேலும் முக்கிய வேடங்களில் ஆர்ஜே பாலாஜி, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்திற்குத் மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படம் 2.30 மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருக்கும்.
இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பாக சக்திவேலன் பெற்று இருக்கிறார். இவர் தொடர்ந்து தரமான படங்களை விநியோகம் செய்து வருகிறார்.. மேலும் சூர்யா கார்த்தி படங்களை இவர் வெளியிட்டு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சக்திவேலன் திரைப்படங்களை விநியோகித்து வெளியிட்டால் அந்த படம் நிச்சயம் வெற்றி படமாக தான் இருக்கும் என்பது கோலிவுட் ரசிகர்களின் மிகப்பெரிய நம்பிக்கை ஆகும் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது..
Karuppu Trailer and Censor update Sakthi film Factory release

