சர்தார் 2 விமர்சனம்… ஆன்ட்டி பயாட்டிக் அலெர்ட்…

சர்தார் 2 விமர்சனம்… ஆன்ட்டி பயாட்டிக் அலெர்ட்…

 

 

 

சர்தார் 2 விமர்சனம்… ஆன்ட்டி பயாட்டிக் அலெர்ட்…

 

ஸ்டோரி…

டாக்டர் அட்வைஸ் இல்லாமல் ஆண்டிபயாட்டிக் மருந்துகளை மக்கள் உட்கொள்கின்றனர்.. இதனைத் தொடர்ந்து உண்பதால் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போகிறது… இதனால் உருவாகும் ஆபத்துக்களை DOKU என்ற Bio Weapon மூலம் உலக மக்களை அழிக்க நினைக்கிறார் வில்லன்..

இது ஒரு புறம் இருக்க… ரா ஏஜென்ட் விஜய பிரகாஷ் தனது தந்தை சர்தார் உயிருடன் இருப்பதாக உண்மையை அறிந்து கொள்கிறார்.. தன் தந்தை சர்தார் உடன் இணைந்து ஆபத்தை தடுக்க நினைக்கிறார்..

மற்றொரு பக்கம்… பிளாக் டேக்கர் சூர்யா.. DOKU என்ற ஆயுதத்தை ஆக்டிவேட் செய்ய மூன்று ரகசிய சாவிகளை தேடி அலைகிறார்..

இந்த மூவருக்கும் நடைபெறும் BIO WAR போராட்டங்களே படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

அப்பா சர்தார்.. மகன் விஜய பிரகாஷ் என இரு கேரக்டர்களை சுமந்திருக்கிறார் கார்த்தி.. உடல் மொழியிலும் குரல் மொழியிலும் வேறுபாட்டை காட்டி இருக்கிறார்.. உயர் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு கடமை உணர்வுடன் பணியாற்றி இருக்கிறார்.. அதே சமயம் ஆக்ஷனில் அதிரடி கிளப்பியிருக்கிறார்..

சர்தார் கேரக்டருக்கு மேக்கப் கவனம் செலுத்தி இருக்கலாம்.. சில மாதங்கள் காத்திருந்து கார்த்தி ஒரிஜினல் தாடி வளர்த்திருக்கலாம்..

செம ஸ்மார்ட்டான வில்லனாக எஸ் ஜே சூர்யா.. வில்லத்தனத்தில் வெரைட்டி காட்டி இருந்தாலும் ஒரு கட்டத்தில்.. வந்தான் சுட்டான் ரிப்பீட்டு.. வந்தான் சுட்டான் ரிப்பீட்டு.. அதே பழைய ஸ்டைலை பின்பற்றி நம்மை எரிச்சல் அடைய செய்கிறார்..

மாளவிகா ஆக்ஷன் காட்சிகளில் அடேங்கப்பா போட வைக்கிறார்.. நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க… நல்லது செஞ்சா நல்லது நடக்கும்… கெட்டது செஞ்சா கெட்டது நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? நல்லது செஞ்சாலும் இப்போ கெட்டது நடக்கும் என்ற வசனம் மூலம் கைத்தட்டல் பெறுகிறார்..

இவர்களுடன் ஆஷிகா ரங்கநாதன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோரும் உண்டு.. ரஜிஷாவுக்கு ஸ்கோப் இல்லை..

இந்தப் படத்தில் சின்னி ஜெயந்த் ஏன்.? அவருக்கு ஒரு டயலாக் கூட இல்லை.. காமெடிக்காக யோகி பாபு வைத்திருந்தாலும் கடுப்பேற்றுகிறார்… நிழல்கள் ரவி கேரக்டரும் வீணடிக்கப்பட்டுள்ளது..

டெக்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் சி எஸ் ஷாம் அவர்களின் 100வது படம் சர்தார் 2… இதன் மூலம் அவர் செஞ்சுரி அடித்திருக்கிறார்.. அவருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..

படத்திற்கு மிகப்பெரிய ஆறுதலாய் ஆதரவாய் அவரது இசை அமைந்திருக்கிறது.. விறுவிறுப்பை பின்னணி இசை மூலம் கூட்டி இருக்கிறார்.. அப்பா கேரக்டர் சர்தார் வரும் காட்சிகளில் பின்னணி இசை மிரட்டல் ரகம்.. சென்டிமென்ட் காட்சிகளிலும் இசை மூலம் உயிரூட்டிருக்கிறார்..

ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. படத்தின் பிரம்மாண்டத்தை காட்சியாக கொடுத்திருக்கிறார்.. மெட்ரோ ட்ரெயின் காட்சி.. மைசூர் தசரா விழா… கேபிள் ரோப் கார் உள்ளிட்ட காட்சிகளை பிரமாதப்படுத்தியிருக்கிறார்..

எடிட்டர் விஜய் வேலுக்குட்டி.. பணியில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. ஆன்ட்டிபயாட்டிக் சமூகப் பிரச்சினையை அலசுவதால் பாடம் நடத்துவது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார்.. எனவே கத்தரி போட்டிருக்கலாம்..

சர்தார் முதல் பாகத்தில் தண்ணீர் பிரச்சனையை பேசிய இயக்குனர் பி எஸ் மித்ரன் இந்த படத்தில் ஆண்டிபயாட்டிக் மருத்துவ பிரச்சனையை சொல்லி இருக்கிறார்.. சாதாரண தலைவலி, வயிறு வலி இவற்றுக்கு நாம் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளும் மருந்துகள் எப்படியான விளைவுகளை உடலுக்குள் செலுத்தி வருகிறோம் என்பதை மையக்கருவாக வைத்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்…

தமிழ் ரசிகர்களுக்கு ஹாலிவுட் பட ஸ்டைலில் ஒரு புதிய ஸ்பை திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்து இருக்கிறார் மித்ரன்.. ஆனால் வீக்கான திரைக்கதை நம்ப முடியாத காட்சிகள் இதன் மூலம் நமக்கு ஏமாற்றமே.. வில்லனை நம்பி தனக்கே வில்லங்கத்தை தேடி இருக்கிறார்.. எஸ் ஜே சூர்யா வின் கேரக்டர் ஓவர் பில்டப் ஓவர் ஆக்டிங் கொடுத்து பாடம் நடத்துவது போன்ற உணர்வை கொடுத்திருக்கிறார்..

 

Karthi in Sardar2 movie review

 

—–